twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகும் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    |

    சென்னை: வெங்கட்பிரபுவும், விஜய் சேதுபதியும் இணைந்து வெளியிட்ட 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' பட ஃபர்ஸ்ட் லுக் சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

    இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'சமுத்திரக்கனியின் பப்ளிக்'.

    இதில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஸ்மார்ட்டாக கேள்வி கேட்ட அமீர்...மனதிறந்த போட்டியாளர்கள் ஸ்மார்ட்டாக கேள்வி கேட்ட அமீர்...மனதிறந்த போட்டியாளர்கள்

    விஜய் சேதுபதியும், வெங்கட்பிரபுவும் இணைந்து

    விஜய் சேதுபதியும், வெங்கட்பிரபுவும் இணைந்து

    ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, படத்தை கே. எல். பிரவீன் தொகுத்திருக்கிறார். கே. கே. ஆர் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கே. ரமேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.

    கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை

    கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை

    படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,'' தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' உருவாகி இருக்கிறது.'' என்றார்.

    கதையின் அழுத்தம்

    கதையின் அழுத்தம்

    சமுத்திரக்கனி - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியிருக்கும் ' சமுத்திரக்கனியின் பப்ளிக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை கவர்ந்திருப்பதால் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.சமுத்திரக்கனி சமீபகாலமாகவே தேர்ந்தெடுக்கும் படங்கள் மிகவும் பிரபலமான மக்கள் ரசிக்கும் படங்களாக மாறி வருகிறது. வித்தியாசமான திரைக்கதை மற்றும் கதையின் அழுத்தம் மக்கள் மனதை மிகவும் யோசிக்க வைக்கும் அளவுக்கு வெரைட்டியான படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

    Recommended Video

    Chithirai Sevvaanam Samuthirakani பெற்றோர்களுக்கு சொல்லும் Advice | Filmibeat Tamil
    மிக முக்கியமான

    மிக முக்கியமான

    2021 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கிய வினோதய சித்தம்,மற்றும் தான் நடித்த ரைட்டர் , சித்திரை செவ்வானம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் மக்கள் மனதில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அந்த வகையில் இந்தப்படமும் சமுத்திரக்கனிக்கு மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது .பொறுத்திருந்து பார்ப்போம் சமுத்திரக்கனியின்நடிப்பு ஆற்றலை சரியாக பயன் படுத்தி இந்த கதையும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும் .

    English summary
    Samuthirakani Starring Samuthirakani Public First Look Released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X