விநோதய சித்தம் தொடர்ந்து மீண்டும் இணையும் சமுத்திரக்கனி-தம்பி ராமைய்யா... தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் காம்பினேஷன் பல திரைப்படங்களில் வெற்றிகரமாக தொடர்ந்திருக்கிறது.

நடிகர்கள் கமல்ஹாசன்- நாகேஷ், சத்யராஜ்- கவுண்டமணி, சரத்குமார்- விஜயகுமார், பார்த்திபன்- வடிவேலு போன்றவர்களின் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா ஆகிய இருவரும் சேர்ந்து பணிபுரியும் படங்களிலும் அவர்களது கூட்டணி வரவேற்பை பெற்று வருகிறது.

அடிப்படையில் இயக்குநர்கள்

அடிப்படையில் இயக்குநர்கள்

இருவருமே அடிப்படையில் இயக்குநர்கள் ஆவர். சமுத்திரக்கனி கே. பாலச்சந்தர் அவர்களிடமும், தம்பி ராமையா இயக்குநர்கள் டி ராஜேந்தர் மற்றும் பி வாசு அவர்களிடமும் துணை இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள். ஆனால் இயக்குவதையும் தாண்டி இருவரும் நடிகர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு பக்கம் மைனா திரைப்படத்தில் தம்பி ராமையா அவர்கள் தேசிய விருது வாங்கியுள்ளார் என்றால், இன்னொரு பக்கம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி.

கூட்டணியில் வந்த படங்கள்

கூட்டணியில் வந்த படங்கள்

இவர்கள் இருவரும் முதன்முதலாக சாட்டை மற்றும் அடுத்த சாட்டை திரைப்படங்களில் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். சமுத்திரக்கனி அவர்கள் இயக்கியிருந்த நிமிர்ந்து நில் படத்தில் தம்பி ராமையா ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்பா திரைப்படத்தில் மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் இருவரும் எதிரும் புதிருமாக நடித்திருந்தனர். அந்தப் படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சென்ற ஆண்டு இந்தக் கூட்டணியை மீண்டும் வினோதய சித்தம் படத்தில் காண முடிந்தது. அதனையும் சமுத்திரக்கனிதான் இயக்கியிருந்தார். இருவரும் முன்னணி கதாப்பாத்திரங்களில் முற்றிலும் வித்தியாசமாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்கள்.

இயக்குநர் தம்பி ராமையா

இயக்குநர் தம்பி ராமையா

நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலு நடித்திருந்த மனுநீதி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான தம்பி ராமையா அதன்பின் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கியிருந்தார். பின்னர் பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கி, அதில் தனது மகன் உமாபதி ராமையாவை கதாநாயகனாக நடிக்க வைத்தார். அதாகப்பட்டது ஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் உமாபதி ராமையா சர்வைவர் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரும் இயக்குநராக அறிமுகமாக போகிறாராம்.

மீண்டும் வெற்றிக் கூட்டணி

மீண்டும் வெற்றிக் கூட்டணி

இந்நிலையில் தம்பி ராமையா தனது நான்காவது படத்தை இயக்குவதற்கு தயாராகியுள்ளார். மாநாடு திரைப்படத்தை தயாரித்திருந்த சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில் அந்தப் படம் உருவாகப் போவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. அதிலும் தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி கூட்டணி இருக்கும் எனவும் உமாபதி அசோசியேட் இயக்குநராக பணிபுரிய போகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X