சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் ரைட்டர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது!
சென்னை : நடிகர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்டுள்ளவர் சமுத்திரக்கனி.
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கக் கூடிய திறமை வாய்ந்த நடிகரான இவருக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்பொழுது பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகிவரும் ரைட்டர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வர இதன் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

சார்பட்டா பரம்பரை
அட்டகத்தி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் அதைத்தொடர்ந்து கபாலி, காலா,மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இப்போது ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி வருகிறார்.

அதிலும் வெற்றி கண்டார்
இயக்குனராக ஏற்கனவே முத்திரையை பதித்த பா ரஞ்சித் தயாரிப்பாளராகவும் வெற்றிகளை கொடுத்து வர மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்து அதிலும் வெற்றி கண்டார்.

காவல்துறையில் பணிபுரியும்
இப்பொழுது தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிராங்கிளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார். இதில் பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்சன், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் லிட்டில் ரெட் கார் மற்றும் ஜெர்ரி புரோடக்சன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார். நடிகர் சமுத்திரக்கனி இதில் காவல்துறையில் பணிபுரியும் ரைட்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குனர் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முக்கியமான படமாக இருக்கும்
இதுவரை சமுத்திரக்கனி பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் வழக்கமான சமுத்திரக்கனியை இப்படத்தில் பார்க்க முடியாது. இது அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என இயக்குனர் பிராங்கிளின் கூறியுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைக்க ரைட்டர் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











