அப்பா படத்திற்கு லஞ்சம் கொடுத்தேன்.. வேதனையை கொட்டித்தீர்த்த சமுத்திரக்கனி!

சென்னை: அப்பா திரைப்படத்திற்கு வரி விலக்கு பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தேன் என்று சமுத்திரக்கனி தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

துணை இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய சமுத்திரக்கனி பல போராட்டங்களை தாண்டி இயக்குநராக உருவாகி தன்னுடைய கனவில் லட்சியத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறார்.

Samuthirakani told reporters that she had given money to buy a tax-free certificate for the film Appa

சமுத்திரக்கனி: சினிமாவில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தில் "கனகு" என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து நிற்க தொடங்கினார். அந்த படத்தைத் தொடர்ந்து விசாரணை, சாட்டை, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி என பல ஹிட் படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அட்டகாசமான நடிப்பு: வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷின் தந்தையாக நடித்த சமுத்திரக்கனி அதன்பின் நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். சேலம் நிலா சோறு என்கிற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சமுத்திரக்கனி, நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு சென்சார் போர்டுக்கு விஷால் பணம் கொடுத்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

பணம் கொடுத்தேன்: இதற்கு பதில் அளித்த நான் இதுவரை 5 படங்களை தயாரித்து இருக்கிறேன், 15 படங்களை இயக்கி இருக்கிறேன். எனக்கு இது போன்ற அனுபவம் நடந்தது இல்லை. ஆனால் அப்பா திரைப்படத்திற்கு டேக்ஸ் ப்ரீ வாங்குவதற்கு நான் பணம் கொடுத்துள்ளேன். அப்பா போன்ற அரசே எடுக்க வேண்டிய படத்தை நான் செலவழித்து படத்தை எடுத்து, பணம் கொடுத்து வரி விலக்கு வாங்கியது வருத்தம் அளிக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார்.

எனக்கு தெரியாது: நடிகர் சித்தார்த், சித்தா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது,கன்னட அமைப்பினர் உள்ளே நுழைந்து அவரை பேசவிடாது தடுத்ததால், பாதியில் வெளியேற்றப்பட்டது குறித்தும், இதுவரை எந்த தமிழக நடிகர்களும் குரல் கொடுக்காது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சமுத்திரக்கனி எனக்கு என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது. பல ஆண்டுகளாக இந்த காவிரி பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறது என பதில் அளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X