பெத்த குழந்தையை மிதிச்சிட்டு.. வளர்ந்ததுக்கு அப்புறம் கொஞ்சுறீங்களேடா நியாயமா.. சமுத்திரகனி ஆவேசம்!
சென்னை: தமிழ் சினிமாவில் புதிதாக வெளியாகும் படங்களை ரசிகர்கள் கொண்டாடாமல் மறு வெளியீடு செய்யப்படும் படங்களைப் பார்த்து ரசிப்பது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை என நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி சமீபத்திய பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கமலா சினிமாஸ் திடீரென கே டிவியாகவே மாறிவிட்டது என மீமெல்லாம் ட்ரெண்டாகும் அளவுக்கு பழைய சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வர பிளான் செய்தனர்.

அண்ணாமலை, விண்ணைத் தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி, யாரடி நீ மோகினி, வாலி, திருமலை, காதலுக்கு மரியாதை என பல திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. திடீரென மலையாள திரைப்படங்கள் ஓட ஆரம்பித்த நிலையில், தமிழ் சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதுதான் யதார்த்தம்: ரீ ரிலீஸ் படங்கள் ஓடக் காரணம் அது 3 நாள் படங்கள் ஓடினாலும் நிச்சய வெற்றி என்பது தியேட்டர் ஓனர்களுக்குத் தெரியும். குணா படத்தை இப்போ ரீ ரிலீஸ் செய்தாலும் மஞ்சுமெல் பாய்ஸ் டிரெண்டிங்கில் அதுவும் நல்லா வசூல் வேட்டை நடத்தும். வசந்த மாளிகை படத்தை ரீ ரிலீஸ் செய்தால் கூட பார்க்க ரசிகர்கள் வருவார்கள். சுப்பிரமணியம் ரீ ரிலீஸ் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், என்னோட புதுப்படம் வருகிறது என்பதே பலருக்கும் தெரியாது. இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் யதார்த்தமே இதுதான் என பேசியுள்ளார்.
பொறந்த குழந்தையை மிதிக்கிறாங்க: புதுசா பொறக்குற குழந்தையை மிதிச்சிட்டு, அது நல்லா வளர்ந்த பிறகு பல வருடங்கள் கழித்து அய்யா ராசா நல்லா வளர்ந்துட்டீயேன்னு கொஞ்சுவது எந்த வகையில் நியாயம் என்று தான் தெரியல என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
ப்ளூ ஸ்டார் முதல் ஜே பேபி வரை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம், சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், ஜே பேபி உள்ளிட்ட பல படங்கள் பெரிய வெற்றியை ஈட்டவில்லை. ஆனால், மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிக வசூலை இங்கே ஈட்டியது குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால், ரசிகர்களை கவரக்கூடிய படங்களை தமிழ் சினிமா கொடுக்காமல் மலையாள சினிமாவை பார்த்து பொறாமைப்படுவது சரியில்லை என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











