சமுத்திரக்கனியின் வெள்ளையானை... நேரடியாக பிரபல தொலைக்காட்சியில் வெளியாகிறது!

சென்னை : சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவான வெள்ளையானை திரைப்படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

ஆத்மியா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ளார். விஷ்ணுரங்கசாமி ஒளிப்பதிவுசெய்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர், பாடல் வீடியோ ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சமூக அக்கறை

சமூக அக்கறை

சமுத்திரக்கனி இயக்குனரும் நடிகருமாவார் சமூக அக்கறை கொண்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கியும் நடித்தும் வருகிறார். இவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் பல விருதுகளை இவருக்கு பெற்றுத்தந்தது. அதே போல போராளி , நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்கள் சமூக பிரச்சினைகளை பேசும் படங்களாக இருந்தன.

கைவசம்

கைவசம்

வெள்ளையானை, தலைவி, எம்.ஜி.ஆர்.மகன், இந்தியன்2,டான், அந்ததூன் ஆகிய படங்களிலும், பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திலும், ஆகாசவானி என்ற தெலுங்கு திரைப்படத்திலும், 2 Days என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துவருகிறார். கிட்டத்தட்ட 10 திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் சமுத்திரக்கனி

நேரடியாக டிவியில்

நேரடியாக டிவியில்

வெள்ளையானை திரைப்படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார் தயாரிப்பார். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், தற்போதுல்ல சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என்பதால், இந்த திரைப்படம் சன் டிவி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விவசாயம் முக்கியம்

விவசாயம் முக்கியம்

விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவுஅழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான் இந்த வெள்ளை யானை. இப்படத்திலிருந்து கடந்த ஆண்டு வெளியான வெண்ணிலாபாடல் வீடியோ அனைவரின் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Read more about: suntv சன் டிவி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X