ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!
சூப்பர் ஸ்டார் ரஜினி கபாலி படத்துக்கு பின் இயக்குநர் ரஞ்சித்துடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு வரும் 28 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கான ஃபோட்டோஷூட் கடந்த வாரம் நடந்தேறியது.
ரஞ்சித்துக்கு இது நான்காவது படம். ரஞ்சித்தின் முதல் மூன்று படங்களில் துணை நடிக, நடிகையர்களை மாற்றவே இல்லை. ஆனால் அவர்களில் யாரையுமே இந்த படத்தில் பயன்படுத்தப்போவதில்லை.

எனவே ரஜினி, ரஞ்சித், ஹீமா குரேஷி ஆகியோர் மட்டுமே இதுவரை பேசப்பட்டார்கள். இப்போது இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான சமுத்திரகனியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வந்திருக்கிறது.
ரஜினியுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளார் சமுத்திரகனி.
Comments


Click it and Unblock the Notifications