சுந்தர். சியின் கன்னட ரீமேக்.. 'நாங்க ரொம்ப பிசி'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள சமுத்திரக்கனி!

By

சென்னை: நாங்க ரொம்ப பிசி படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி, அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார்.

இதன் ஷூட்டிங் குஜராத்தில் நடந்தபோது கொரோனா பரவல் அதிகமானது. இதனால் படக்குழு சென்னை திரும்பியது.

காமெடி பேய்

காமெடி பேய்

அரண்மனை 3 படத்தில் நடிகர் ஆர்யா, பேயாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. விவேக், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் பேய் படம் இது. ஹீரோயின்களாக, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிக்கின்றனர். இதன் அடுத்த ஷெட்யூல், விரைவில் தொடங்க இருக்கிறது.

 மாயாபஜார் ரீமேக்

மாயாபஜார் ரீமேக்

இதற்கிடையே, தனது அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் படங்களை தயாரித்து வரும் சுந்தர்.சி, சத்தம் போடாமல் ஒரு படத்தை தயாரித்து முடித்துள்ளார். கன்னடத்தில், வெளியாகி ஹிட்டான படம், 'மாயாபஜார்'. இதில், ராஜ் பி ஷெட்டி, வசிஷ்டா சிம்ஹா, பிரகாஷ் ராஜ், அச்சியுத் குமார், சாது கோகிலா உள்பட பலர் நடித்திருந்தனர்.

இயக்குனர் பத்ரி

இயக்குனர் பத்ரி

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு மிதுன் முகுந்தன் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர். சி பெற்றிருந்தார். இதன் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. பத்ரி இயக்கினார். இவர் சுந்தர்.சி நடித்த வீராப்பு, ஐந்தாம் படை, பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, சிவா நடித்த தில்லுமுல்லு, ஆடாம ஜெயிச்சோமடா படங்களை இயக்கியவர்.

 ரைசா வில்சன்

ரைசா வில்சன்

இதில், நடிகர் ஷாம், பிரசன்னா, அஸ்வின், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹீரோயினாக, ஸ்ருதி மராத்தி நடிக்கிறார். இவர் தமிழில் இந்திரவிழா, குருசிஷ்யன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு நாங்க ரொம்ப பிசி என்று டைட்டில் வைத்துள்ளனர்.

சுவாரஸ்ய படம்

சுவாரஸ்ய படம்

இதில் நடிகர் சமுத்திரக்கனி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படம் சன் டைரக்டில் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது. பண மதிப்பிழப்பு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X