twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கெட்டப் மாற்றி... உடலை ஏற்றி...7 மொழிகளில் உருவாகும் படத்தில் மதுரை தாதா ஆகிறார் சமுத்திரக்கனி

    By
    |

    சென்னை: மெகா பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி மதுரை தாதாவாக நடிக்க இருக்கிறார்.

    கே.ஜி.எஃப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் படம், கப்ஸா. இதில் உபேந்திரா ஹீரோவாக நடிக்கிறார். சந்துரு இயக்குகிறார்.

    தாதா கதையான இந்த படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் தயாராகிறது.

    சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில் பிரபல தாதாவாக நடிக்கிறார் உபேந்திரா.

     இந்த ஒரு போஸ்ட் போதும் இந்த மாசம் வரை தாங்கும்.. ஃபேன்ஸ் கொண்டாடும் அந்த பிரபலம் யாருன்னு பாருங்க! இந்த ஒரு போஸ்ட் போதும் இந்த மாசம் வரை தாங்கும்.. ஃபேன்ஸ் கொண்டாடும் அந்த பிரபலம் யாருன்னு பாருங்க!

    தாதா வாழ்க்கை

    தாதா வாழ்க்கை

    இதற்காக தாதாக்களின் வாழ்க்கையை, அவர்களின் மேனரிசம், சங்கேத வார்த்தைகள் உட்பட பலவற்றை ஆய்வு செய்து கதையை உருவாக்கி உள்ளனர். 80-களில் நடக்கும் கதை. இதன் தொடக்க விழா பெங்களூரில் நடந்தது.

    பிரகாஷ்ராஜ்

    பிரகாஷ்ராஜ்

    இதில் ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருக்கின்றனர். அதாவது பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, நானா படேகர், பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

    சமுத்திரக்கனி

    சமுத்திரக்கனி

    தமிழில் இருந்து சமுத்திரக்கனி நடிக்கிறார். இவர் மதுரை தாதாவாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. 80 களில் நடக்கும் கதை என்பதால் கெட்டப் மாற்றி, உடல் எடையை கூட்டி அவர் நடிக்க இருக்கிறாராம்.

    பக்கா பிளான்

    பக்கா பிளான்

    படப்பிடிப்பு மும்பை, பெங்களூர், மதுரை, மங்களூரு பகுதியில் நடக்க இருக்கிறது. ஒரே நேரத்தில் ஒவ்வொரு மொழிக்கும் மாற்றி மாற்றி எடுக்க உள்ளனர். இதற்காக பக்கா திட்டத்துடன் படக்குழு களமிறங்க உள்ளது.

    English summary
    Actor Samuthrakani is going to act as a Madurai dada in his upcomming movie Kabza.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X