நாங்க பாதுகாப்பா இருக்கோம்...பிறந்த குழந்தையுடன் அமெரிக்காவில் இருந்து போஸ்ட் போட்ட நடிகை!
சென்னை: தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள பிரபல நடிகை, அமெரிக்காவில் தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில், ஶ்ரீகாந்த், சங்கீதா நடித்த உயிர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை சம்விருதா சுனில்.
மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், மோகன் சர்மா இயக்கிய, நம்ம கிராமம் என்ற தமிழ்ப் படத்திலும் நடித்திருந்தார்.

திருமணம்
தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவருக்கு, கேரளாவில் பக்கத்துவீட்டுப் பெண் என்ற இமேஜ் உண்டு. டிவி. தொடரிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அகில் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா அகில் என்ற மகன் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த சம்விருதா, பிறகு நடிக்கத் தொடங்கினார்.
View this post on InstagramA post shared by Samvritha Akhil (@samvrithaakhil) on
அமெரிக்கா
இவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு வட கரோலினா பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அங்கு அவருக்கு சமீபத்தில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார், நடிகை சம்விருதா. புதிதாக பிறந்த குழந்தையுடன், மகனிடம் அவர் ஏதோ பேசுவது போல் அந்த புகைப்படம் உள்ளது.

கடினமான நேரம்
இதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதில், அமெரிக்காவில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 'ஒரு மாதத்துக்கு மேலாகத் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்தாலும் எதற்கும் நேரமில்லாமல் இருக்கிறோம். இந்தக் கடினமான நேரத்தை, குடும்பத்துடன் சேர்ந்து செலவழிக்க வாய்ப்பு பெற்றதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

இயல்பு நிலை
நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று என்னிடம் விசாரித்த அனைவருக்கும், நன்றி. நாங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறோம். இந்த கஷ்டமான காலகட்டத்தில் இருந்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்று நம்புகிறேன், அதற்காகப் பிரார்த்திக்கிறேன் என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார், சம்விருதா. இதையடுத்து பல ரசிகர்கள் அவருக்கு விசு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ், இப்போது இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ்தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.


Click it and Unblock the Notifications











