»   »  பிரியங்கா கையில் வர்ஷா குடுமி... வர்ஷா கையில் பிரியங்கா குடுமி... செம சண்டை.. ஏன் தெரியுமா?

பிரியங்கா கையில் வர்ஷா குடுமி... வர்ஷா கையில் பிரியங்கா குடுமி... செம சண்டை.. ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கங்காரு படத்திதல் நாயகி வர்ஷா அஸ்வதியும், நாயகனின் தங்கையாக வரும் ஸ்ரீ பிரியங்காவும் அஜீத், விஜய் ரசிகைகளாக வருகிறார்களாம். ஒரு காட்சியில் இருவரும் சண்டை போடுவது போல காட்சி வைத்துள்ளாராம் இயக்குநர் சாமி.

மிருகம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் சாமி. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், கங்காரு படத்தை இயக்கியுள்ளார் சாமி.

இந்தப் படத்தில் நிறைய சுவாரஸ்யமான காட்சிகள் இடம் பெற்று, படத்துக்கு மேலும் மெருகு சேர்த்துள்ளதாம்.

நாயகனின் தங்கை ஸ்ரீபிரியங்கா...

நாயகனின் தங்கை ஸ்ரீபிரியங்கா...

அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.

காதலியாக வர்ஷா...

காதலியாக வர்ஷா...

நாயகன் அர்ஜுனாவின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார்.

மீண்டும் கஞ்சா கருப்பு

மீண்டும் கஞ்சா கருப்பு

தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன், இயக்குனர் ஜெகன் ஆகியோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ராஜரத்னம் செய்துள்ளார்.

செம மோதல்

செம மோதல்

கங்காரு படத்தில் அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை வைத்துள்ளார் சாமி. படத்தில் பிரியங்கா அஜீத் ரசிகையாகவும், வர்ஷா விஜய்யின் ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக்கொள்வார்கள்.

5 நிமிஷம் செம சண்டை

5 நிமிஷம் செம சண்டை

பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு நீளும்.

ரசிகரை மணக்கும் பிரியங்கா

ரசிகரை மணக்கும் பிரியங்கா

இத்தோடு விட்டாரா சாமி, "தல" ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும் காட்சிகள் வைத்துள்ளாராம். படம் ஏப்ரல் பத்தாம் தேதி 150 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

English summary
Kangaroo is an upcoming Tamil film directed by Samy and produced by V House Productions. The film features newcomers Arjuna, Priyanka and Varsha Ashwathi in the lead roles, with singer Srinivas composing the film's music
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil