அது ட்ரூ தான் சார்.. பாலாஜியின் கைப்பாவை சம்யுக்தா.. இருவருக்கும் இன்னைக்கு செம டோஸ் இருக்கு போல!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் நேற்று 3வது புரமோ போடலை இன்னைக்கும் போடமாட்டாங்கன்னு பார்த்த, திடீரென 3வது புரமோவும் வந்து விட்டது. எடிட்டர் முழித்துக் கொண்டார் போல!
என்னடா இன்னும் அந்த தலைவர் மேட்டரும் 'தருதலை' விஷயமும் வரலையே என பார்த்தால், கமல் அழகாக சம்யுக்தா வாயாலே வார்த்தைகளை புடுங்கி பாலாவுக்கு மீண்டும் வேட்டு வைத்துள்ளார்.
இந்த தீபாவளிக்கு பாலாஜிக்கு தான் ஏகப்பட்ட பட்டாசுகள் வெடிக்கும் போல தெரிகிறது.

ஏன் தான் தலைவர் ஆனேனோ
மூன்றாவது புரமோவின் ஆரம்பத்திலேயே, கமல் சார் கேட்டதும், இந்த வாரம் ஏன் தான் தலைவர் ஆனேனோன்னு இருக்கு சார் என சம்யுக்தா மீண்டும் தனது அழுகாச்சி டிராமாவை ஆட ஆரம்பித்தார். ஆனால், கமல் சார் ஒவ்வொரு கேள்வியையும் நறுக்கென்று கேட்டு அலற விட்டுள்ளார்.

கைப்பாவை
சோமசேகரை பாலாஜி முருகதாஸ் பப்பட் என்று கூறியது வாதாடு மன்றம் வரை வந்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், சம்யுக்தாவை தலைவராக்கி பாலா தனது அரசியலுக்காக அவரை கைப்பாவையாக வைத்துக் கொண்டது போல தெரிகிறது என கமல் சார் மக்களின் மன ஓட்டங்களை அப்படியே பேசுவது புரமோவில் கை தட்டல்களை அள்ளி உள்ளது.

அது ட்ரூ தான் சார்
கமல் சொன்னதை கேட்டதும், இந்த முறை பாலாஜி முருகதாஸ் பக்கம் நிற்காமல், அது ட்ரூ தான் சார் என்று தனது மனதில் உள்ள குமுறலை கொட்டித் தீர்த்துவிட்டு, பின்னர், சமாளிக்க முற்படும் போது, ட்ரூ தானே அப்போ ட்ரூத்தையே பேசலாம் என பாலா பக்கம் சாட்டையை சுழற்றும் புரமோ ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video

தறுதலை பிரச்சனை
இரண்டாவது புரமோவிலேயே பாலாஜி முருகதாஸ் பேசிய தறுதலை வார்த்தை குறித்து கச்சேரி வைக்க ஆரம்பித்த கமல், இந்த புரமோவிலும் பாலாவை ஓரங்கட்டி அந்த நமட்டுச் சிரிப்பே இல்லாமல் செய்ததை பார்த்த ரசிகர்கள், இது மட்டும் போதாது, அவனை வீட்டை விட்டே அடித்து விரட்டுங்கள் என்றும் கமெண்ட்டுகளில் திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











