twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேமராவை பார்த்து பார்த்து பேசி.. சனமை அப்படியே தோலுரித்த சம்யுக்தா.. வேற லெவல் போங்க!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கமல் கொடுத்த டாஸ்க்கில் சம்யுக்தா பட்டையை கிளப்பினார்.

    பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களை நடிகர் கமல்ஹாசன் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தித்து வருகிறார்.

    அப்படி சந்திக்கும் போது, ஒவ்வொரு வாரமும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒரு டாஸ்க்கை கொடுத்து வருகிறார்.

    நேற்றைய டாஸ்க்

    நேற்றைய டாஸ்க்

    மாஸ்க் போடுவது, பேட்ஜ் கொடுப்பது, கொம்பு வைப்பது, கிரீடம் வைப்பது, க்ராஸ் மார்க் டிக் மார்க் என வகை வகையாக டாஸ்க் கொடுத்து வருகிறார் கமல். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய எபிசோடிலும் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார் கமல்.

    நடித்து காட்ட வேண்டும்

    நடித்து காட்ட வேண்டும்

    அதன்படி ஒரு ட்ரேயில் வைக்கப்பட்டிருந்த ஹவுஸ்மேட்டுகளின் படத்தை எடுத்து அவர் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இருக்கக் கூடாது என்பதற்காகவும் அவரை போன்று நடித்து காட்ட வேண்டும் என்றார்.

    அனிதாவை போல் சிரித்து

    அனிதாவை போல் சிரித்து

    இதனை தொடர்ந்து, அர்ச்சனா சுரேஷை போன்றும் ரியோ பாலாஜியை போன்றும் நிஷா வேல்முருகனை போன்றும் நடித்துக் காட்டினர். ஜித்தன் ரமேஷ் அனிதாவை போல் சிரித்துக் காட்டி நடித்தார்.

    இருக்க வேண்டும்

    இருக்க வேண்டும்

    தொடர்ந்து சனம் ஷெட்டியை போன்று நடித்துக் காட்டினார் சம்யுக்தா. அப்போது, நிலா அது வானத்து மேல என்று பாட்டுப்பாடி டான்ஸ் ஆடினார். அதனை தொடர்ந்து உங்களுக்கு கால் வலிக்குதா, தலை வலிக்குதா மசாஜ் பண்ணிவிடனுமா என்றெல்லாம் கேட்டு அதற்காக சனம் இருக்க வேண்டும் என்றார்.

    கேமராவை பார்த்து பேசுவது

    கேமராவை பார்த்து பேசுவது

    அடுத்து கேமராவை பார்த்து பார்த்து பேசுவது, நான் ஒன்னு பேசியே ஆகனும், நிஷா டிஃப்ரன்ட்டா பண்ணியிருக்கலாம், பாலாஜி டிஃப்ரண்ட்டா பண்ணியிருக்கலாம், இந்த வீட்டில் குரூப்பிஸம் இருக்கு என சனம் பேசும் டயலாக்குகளை எல்லாம் கூறி இந்த காரணத்திற்காக இருக்க வேண்டாம் என்றார்.

    English summary
    Samyuktha acts like Sanam shetty in Biggboss task. Kamal has given task to housemates in Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X