தலைவருக்கே நான் தகுதியில்லை.. தேம்பித் தேம்பி அழுத சம்யுக்தா.. நல்லா நடிக்கிறா என விளாசிய தாத்தா!
தலைவருக்கே நான் தகுதியில்லை.. தேம்பித் தேம்பி அழுத சம்யுக்தா.. நல்லா நடிக்கிறா என விளாசிய தாத்தா!
சென்னை: கயிறு சுற்றும் போட்டியில் சோமசேகர் மற்றும் நிஷாவை வீழ்த்தி நடிகர் ஆரி வெற்றிப் பெற்று அடுத்த வாரத்திற்கான தலைவர் ஆனார்.
நடிகர் ஆரியை பிக் பாஸ் வீட்டினர் திடீரென தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுவதை பார்த்து பொறுமிக் கொண்டிருந்த சம்யுக்தாவிடம், சுரேஷ் தாத்தா வந்து, தனக்கு நேர்ந்த அநியாயத்தை பற்றி கேட்டு மேலும், டென்ஷன் ஆக்கி விட்டார்.
தலைவருக்கே தான் தகுதியில்லை என சம்யுக்தா தேம்பித் தேம்பி அழுதது ரசிகர்களை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியது.

கொம்பு முளைச்சிடும்
பிக் பாஸ் வீட்டில் தலைவர் ஆனாலே அவங்களுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு கொம்பு முளைச்சிடும். முதல் வாரம் எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் ரம்யா பாண்டியன் தலைவர் ஆனார். ஆனால், கடைசி வரை யார் மனதையும் புண்படுத்தாமல் பார்த்துக் கொண்டார். ரியோவும் கேப்டன்ஸியை நல்லாவே பண்ணார். கொம்பு முளைத்த தலைவர்களாக சுரேஷ், அர்ச்சனா மற்றும் சம்யுக்தா ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனாவுக்கு வாய்ப்பே இல்லை
அதிக ஓட்டுக்கள் அடிப்படையில் அர்ச்சனா அக்கா தலைவர் ஆனார். அவருக்கெல்லாம் இப்படி பிசிக்கல் டாஸ்க் கொடுத்தால், நிஷா செய்ததில் பாதி கூட செய்திருக்க மாட்டார். பேசுவது, கூட்டணி வைத்து ஜெயிப்பது, சமையல், நடிப்பு போன்ற விஷயங்களில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லை.

என் பிரச்சனைக்கு வாங்க
சும்மா ஆரி கூடவே சண்டை போட்டுக்கிட்டு அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கி அடுத்த வாரம் தலைவர் ஆக்கிட்டீங்க, என் பிரச்சனைக்கு வாங்க என சம்யுக்தாவை வம்படியாக இழுத்து, மொக்கை கேபி கேஸுக்கு ஆதரவாக பேசிய பிரச்சனையை கிளப்பினார். உடனே சம்யுக்தா மம்மி அழ ஆரம்பித்து விட்டனர்.

தேம்பி தேம்பி அழுத சம்யுக்தா
ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகளை அறிவுடனும் தெளிவுடனும் தீர்த்து வைத்த காரணத்தால், சம்யுக்தா தலைவரானால் நல்லா பண்ணுவாருப்பா என பலரும் நம்பினார்கள். ஆனால், அவர் சிலருக்கு மட்டுமே ஃபேவரிசம் செய்தார் என சுரேஷ் தாத்தா அழுத்தி சொன்னதும், ஏற்கனவே ஆரியால் நொந்து போயிருந்த மனம் மேலும் புண்ணாகி வெடிச்சுடுச்சு.

சும்மா நடிக்கிறா
சுரேஷ் தாத்தா அந்த பக்கம் போனதும் பாலா, ஷிவானி கூட சேர்ந்து கொண்டு சம்யுக்தா சிரிப்பதை பார்த்து விட்ட சுரேஷ் தாத்தா, அர்ச்சனா அண்ட் கோவினரிடம் வந்து, சும்மா நடிக்கிறா, நான் போனா அழுவது போல சீன் போட்டாங்க, இப்போ சிரிக்கிறாங்க என அவர்கள் என்னமோ இவருக்காக பேசுவார்கள் என புகார் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

லவ் சீனே காணோம்
அர்ச்சனா மம்மியின் அட்வைஸுக்கு பிறகு, இன்றைய எபிசோடில் பிக் பாஸ் எடிட்டரும் லவ் சீனை வைக்கவில்லை. நிகழ்ச்சியிலும் காட்டவில்லை. ஆனால், ஷிவானி தொடர்ந்து பாலா உடன் சுற்றித் திரிந்து வருகிறார் என்பது மட்டுமே தெரிந்தது. நாளைக்கு கமல் சார் பிறந்தநாள் எபிசோடு எப்படி இருக்கப் போகிறதோ?


Click it and Unblock the Notifications











