அனிதா கிச்சன் டீம்மில் இருந்தால் பாத்திரம் சேருமா? ரியோவை தன் பங்குக்கு ஏறிவிட்ட சம்யுக்தா!
சென்னை: அனிதா கிச்சன் டீமில் இருந்தால் பாத்திரம் சேருமா என்று அனைவருக்கும் முன்பு ரியோவை உட்கார வைத்து தன் பங்குக்கு கேள்விகளை கேட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முழுக்க முழுக்க ரியோவை டார்கெட் செய்தது போலவே இருந்தது.
சனம் ஷெட்டி முதல் ஷிவானி வரை அனைவருமே ரியோவையும் அவரது கேப்டன்சியையும் வறுத்தெடுத்துவிட்டனர்.

உங்கள் மீது ஒரு கேஸ்
சனம் ஷெட்டி, அனிதா, ரம்யா என மூன்று பேரும் அவரவர் பங்குக்கு ரியோவை விளாசிவிட்டனர். அந்த வகையில் சம்யுக்தாவும் தனது பங்குக்கு ரியோவிடம் கேள்விகளை கேட்டார். கிச்சன் ஏரியாவில் நின்றிருந்த ரியோவை அழைத்த சம்யுக்தா உங்கள் மீது ஒரு கேஸ் என்றார்.

டீம் பிரிக்கும் போது
அச்சச்சோ அப்படியா என பதறியப்படியே வந்தார் ரியோ. தொடர்ந்து ரியோவிடம் கேள்விகளை கேட்க தொடங்கினார் சம்யுக்தா, டீம் பிரிக்கும் போது என்னை வெஸல்ஸ் டீமில் போட்டீங்க, அனிதாவை குக்கிங் டீமில் போட்டீங்க, ரமேஷை பாத்ரூம் கிளினிங் போட்டீங்க.

எங்கம்மா சத்தியமா இல்லை
அதன் பிறகு ஏன் மாத்தினீங்க? நிஷா அக்கா பாத்திரம் கழுவும் டீம்மில் இருக்கும்போது, யார் கிட்சன் டீம்முன்னு தெரியும்ல பாத்திரம் அதிகம் சேரும் என்று அனிதாவை குறிப்பிட்டு சொன்னது போல இருந்தது என்றார். அதற்கு எங்கம்மா சத்தியமா நான் அப்படி நினைக்கவும் இல்லை பேசவும் இல்லை என்றார்.

ரோலர் கோஸ்டர்
அனிதா கிச்சன் டீமில் இருந்தால் பாத்திரம் சேரும் என்று நான் சொல்லவில்லை. பாத்திரம் அதிகம் வரும் கழுவ முடியுமா என்றுதான் கேட்டேன் என்றும் விளக்கம் கொடுத்தார் ரியோ. தொடர்ந்து பேசிய ரியோ, ஆளாளுக்கு கேள்வி கேட்டதால் ரோலர் கோஸ்டரில் போய் விட்டு வந்தது போல் இருப்பதாக கூறினார்.


Click it and Unblock the Notifications











