Just In
- 3 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 4 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 4 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 5 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இவ்ளோ கலீஜா பேச ஆரம்பிச்சிட்டாங்களே.. எந்த கஸ்டமர் கேர் ஆபிசர் இப்படி பேசுவாங்க? எல்லை மீறுது!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் மிகவும் கேவலமான சண்டைகளுடன் தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ரொம்பவே உற்சாகத்தை கொடுத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், அழுகாச்சி சீன்களையோ, பாசத்தையோ ஜூஸ் போட்டு குடித்தால், ரசிகர்கள், துப்பி விடுகிறார்கள்.
அவர்கள், எதிர்பார்க்கும் சண்டையை காட்சிகளை வாரத்தின் முதல் மூன்று நாட்களிலும், அதற்கான சமாதானத்தை அடுத்தடுத்த நாட்களிலும் செய்வதையே வழக்கமாக்கி விட்டனர்.

பயங்கர சண்டை
பாலாஜி முருகதாஸை இன்னும் ஏன் பிக் பாஸ் வீட்டில் வைத்திருக்கிறார்கள் என்றால், டி.ஆர்.பி.க்காக மட்டும் தான். யாரையும் மதிக்காமல் எடுத்து எறிந்து பேசுவது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல வருவதால், இன்னமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்கிறார். ஆரி, அர்ச்சனா என அனைவருடனும் பயங்கர சண்டை போட்டு வருகிறார் பாலாஜி.

வெளியே வந்தால்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தால், ஏகப்பட்ட வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலை தான் பாலாஜி முருகதாஸுக்கு ஏற்படும் என்று தெரிகிறது. கண்டபடி வாய் விட்டு, இஷ்டத்துக்கு கன்டென்ட் தருகிறேன் என்கிற பேரில் பேசி, ஜோ மைக்கேல் உள்ளிட்ட பலருடன் பிரச்சனையை வளர்த்துக் கொண்டார்.

தெறிக்கிறது புரமோக்கள்
இன்றைய பிக் பாஸ் புரமோக்கள் மூன்றுமே வேற லெவல். ஒவ்வொன்றும், குரூரத்தின் உச்சமாக தெறிக்கிறது. முதல் இரு புரமோக்கள் பாலாவுக்கும், அர்ச்சனாவுக்கும் ஏற்படும் மோதல்களை காட்டிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோ, சம்யுக்தா - சனம் ஷெட்டி இடையே ஏற்பட்ட மோதலை வெளிச்சப்படுத்தியுள்ளது.

ரொம்ப கலீஜா இருக்கு
கால் சென்டர் டாஸ்க் கொடுத்து, பிக் பாஸ் நாரதர் அடுத்த சண்டையை ஹவுஸ்மேட்கள் மத்தியில் நல்லாவே கொளுத்திப் போட்டு விட்டார். ஏற்கனவே Topple கார்டு பிரச்சனை எரிந்து கொண்டு இருக்கும் நிலையில், அடுத்து, கலீஜு பிரச்சனை சூடு பறக்கிறது. சனம் ஷெட்டி, சம்யுக்தாவிடம் பேசும் போது, பார்க்க அழகா இருக்கீங்களே தவிர, பேசுறது எல்லாம் ரொம்ப கலீஜா இருக்கு என சம்யுக்தா சொல்ல சூடாகிறார் சனம்.

கஸ்டமர் கேர்
எந்த கஸ்டமர் கேர் அதிகாரியாக இருந்தாலும், கஸ்டமர்கள் எப்படி பேசினாலும், மரியாதை கொடுத்து, நாவடக்கமாக பேச வேண்டும். ஆனால், டம்மி மம்மி சம்யுக்தா, தன்னை நாமினேஷனில் கொண்டு வந்துட்டாங்களே என்கிற பொறாமையால், கலீஜு என்கிற வார்த்தையை சனமுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது அடுத்த ‘தறுதலை' போன்ற வார்த்தை பிரயோகத்தை ஸ்க்ரிப்ட் ரைட்டர் கொடுத்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

பொறப்பு அப்படி
மேலும், சனம் ஷெட்டி, கலிஜின்னு சொல்றவங்க மனசுதான் ரொம்ப கலிஜா இருக்கும் என சரியான செருப்படியை சம்யுக்தாவுக்கு கொடுக்கிறார். தலைவர் ஆனது குறித்த பிரச்சனை கிளம்ப, அவங்க பொறப்பு அப்படி இருக்கும் என சம்யுக்தா, ஆரியை பற்றி பேசுகிறாரா? இல்லை சனமை பற்றி பேசுகிறாரா? என்பது தெரியவில்லை. இன்னைக்கு செம சண்டை இருக்கு! வெல்கம் டு பிக் பாஸ் சீசன் 4!