திடீரென கதறி அழுத சம்யுக்தா.. அரண்டு போன ஹவுஸ்மேட்ஸ்.. ஆறுதல் சொன்ன அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சம்யுக்தா திடீரென கதறி அழுததால் ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 2007 ஆம் ஆண்டின் மிஸ் சென்னையும் மாடலுமான சம்யுக்தா பங்கேற்றுள்ளார்.
குழந்தைக்கு தாயான சம்யுக்தா தனது குழந்தையை பிரிந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

மாஸ் மரணம்
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில், தொடக்கமாக பேட்ட படத்தில் இடம்பெற்ற மாஸ் மரணம் பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதற்கு ஹவுஸ்மேட்ஸ்களில் சிலர் ஆட்டம் போட்டனர். சிலர் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கினர்.

கதறிய சம்யுக்தா
இதனை தொடர்ந்து தனது பெட்டில் ஃபுல் மேக்கப்பில் கண்ணீர் விட்டு அழுதப்படியும் அதனை காஜல் அழியாதவாறு துடைத்தப்படியும் அமர்ந்திருந்தார் சம்யுக்தா. சம்யுக்தா அழுவதை பார்த்த ஷிவானி நாராயணன் ஓடோடி வந்து என்ன ஆனது ஏன் அழுகிறீர்கள் என அணைத்தப்படி கேட்டார்.

வலி தெரியும்
அதற்கு தனது மகன் ஞாபகம் வந்துவிட்டதாகவும் அதனை நினைத்து ஃபீல் பண்ணுவதாகவும் கூறினார் சம்யுக்தா. தொடர்ந்து அருகில் வந்த அர்ச்சனா, எனக்கு அந்த வலி தெரியும் என சம்யுக்தாவுக்கு ஆறுதல் கூறினார்.

பதறிய ஹவுஸ்மேட்ஸ்
தொடர்ந்து திடீரென தனது மகனின் ஞாபகம் வந்துவிட்டதாக கூறி அழுதார். ரேகாவும் அவருக்கு ஆறுதல் கூறினார். திடீரென சம்யுக்தா அழுததை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் பதறி போய்விட்டனர்.


Click it and Unblock the Notifications











