ஆரிக்கு எகிறிய மவுசு.. தாங்க முடியாமல் கேவி கேவி அழுத சம்யுக்தா.. சமாதானம் படுத்த யாரும் வரல!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 34வது எபிசோடில், ஹவுஸ்மேட்கள் ஆரி, சோமசேகர் மற்றும் நிஷாவை சிறந்த போட்டியாளர்கள் என தேர்வு செய்தனர்.

ஆரி சூப்பரா விளையாடுனாருன்னு அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், ஆஜீத் உள்ளிட்டோர் சொன்னது சம்யுக்தாவுக்கு பொறுக்க முடியவில்லை.

முதல் புரமோவில் காட்டிய அந்த காட்சிகளை சீனோடு பார்த்த ரசிகர்கள், தலைவி ஆகிட்டோம்னு என்ன ஆட்டம் போட்ட இப்போ நல்லா வேணும் என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தூங்கிட்டாரு போல

தூங்கிட்டாரு போல

நேற்றைய எபிசோடை விட இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே சென்றது. ஆனால், சம்யுக்தா அழுததை பார்த்து தாங்க முடியாத பிக் பாஸ் எடிட்டர் சோகத்தில் சரக்கடித்து தூங்கி விட்டார் போல தெரிகிறது. ப்ரீத்தி மிக்ஸி விளம்பரம், தலைவர் போட்டிக்கான பிசிக்கல் டாஸ்க், சுரேஷ் தாத்தா சம்யுக்தா சண்டை என எதையாவது ஒன்றை மூன்றாவது புரமோவாக போட்டிருக்கலாம்.

சம்யுக்தா புராணம்

சம்யுக்தா புராணம்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது புரமோவில், ஆரி தலைவராக தேர்வாவதும், அதை பார்க்க முடியாமல் பொறாமையால் சம்யுக்தா அழுது வடிவதுமாக சம்யுக்தா புராணமாகவே இரண்டு புரமோக்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியிலும், அந்த போர்ஷன் மொக்கையாக இருந்தாலும், சம்யுக்தா அழுவதை ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

யாருமே கண்டுகல

யாருமே கண்டுகல

ஆஜீத், ரியோ, பாலா என ஒரு சிலரிடம் மட்டுமே சம்யுக்தா இந்த பிரச்சனை குறித்து விவாதித்தார். ஆரி அப்படி கத்தி பேசுனது யாருக்குமே தப்பா தெரியலையா என்றும் எல்லாருமே சூப்பரா பேசுனாரு என கை தூக்கினால் என்ன அர்த்தம் என்றும் சம்யுக்தா கேட்டார். அர்ச்சனா, சுச்சி, ரம்யா பாண்டியன், அனிதா, ஷிவானி, நிஷா, ரமேஷ், சோம் என யாருமே தலைவி சம்யுக்தாவை கண்டு கொள்ளவில்லை.

அழகா கோர்த்து விட்ட ரியோ

அழகா கோர்த்து விட்ட ரியோ

ஆரி புரோ வருகிறார் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என சம்யுக்தாவை ஆஃப் செய்து விட்டு, அழகாக ஆரியிடம் நீங்க சிறந்த போட்டியாளர் என தேர்வானது பிடிக்கவில்லை என்றும், ரொம்ப ஃபீல் பண்றாங்க என்றும் நல்லா கோர்த்து விட்டு தனது நாரதர் வேலையை காட்டினார்.

ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டாங்க

ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டாங்க

ஒரு பொண்ணை அப்படி இன்சல்ட் பண்ணவருக்கு சாதகமா எல்லோரும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்றாங்க, என தனக்கு கிடைச்ச ஒரே ஆதரவான ஆஜீத்திடம் புலம்பி தள்ளுகிறார் சம்யுக்தா. ஆனால், ஆஜீத்தும் ஆரி பிரதருக்கு ஆதரவாகத் தான் ஓட்டுப் போட்டான் என்பதை யார் தான் சம்யுக்தாவுக்கு சொல்லி புரிய வைப்பார்களோ தெரியவில்லை.

எஸ்கேப்பான லவ் பேர்ட்ஸ்

எஸ்கேப்பான லவ் பேர்ட்ஸ்

இதுக்கு மேல சம்யுக்தா நமக்கு பயன்பட மாட்டாங்க என தெளிவா தெரிந்து கொண்ட பாலாஜி முருகதாஸ், அப்படியே அவரை நைஸா கழட்டி விட்டு, உங்களை இல்லை என்னதான் இந்த வீட்டில எல்லாருமே கார்னர் பண்றாங்க என சொல்லி எஸ்கேப் ஆக அவருடன் சேர்ந்து அவருடைய ஜோடி புறாவும் டம்மி மம்மியை கண்டு கொள்ளாமல் கதற விட்டுச் சென்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X