For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எல்லாரும் சூப்பரா பேசுனாருன்னு சொல்லி எனக்கு சூப்பு வச்சுட்டீங்களே.. அழுது புலம்பும் டம்மி மம்மி!

  |

  சென்னை: பாலாஜி முருகதாஸின் சுய நல ஆட்டத்தால், பப்பட் தலைவராக மாறிய சம்யுக்தா, அடுத்த வார தலைவர் போட்டிக்கு ஆரியை ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்ததை பார்த்து பொறாமையால் பொங்கி அழ ஆரம்பித்து விட்டார்.

  இதுக்கு மேல டம்மி மம்மி வேலைக்கு ஆக மாட்டாங்கன்னு தெரிஞ்சிக்கிட்ட பாலா, நைஸா எஸ்கேப் ஆகிட்டாரு.

  பாவம் சுட்டிக் குழந்தை ஆஜீத் மட்டுமே இப்ப சம்யுக்தாவுக்கு ஒரே ஒரு ஆதரவு.

  மூன்றாவது நபர் யார்?

  மூன்றாவது நபர் யார்?

  இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில், அடுத்த வார தலைவருக்கான போட்டிக்கு இந்த வாரம் சிறப்பாக விளையாடி மூன்று பேரை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் சொல்கிறார். ஆரி, நிஷா, சோமசேகர் ஆகிய மூன்று பேரை பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்வதாக புரமோ காட்சிகளில் தெரிகிறது.

  தப்பா தெரியலையா?

  தப்பா தெரியலையா?

  தறுதலை என்கிற வார்த்தை காமெடியான வார்த்தை என பாலா பக்கம் நீதி வாங்கி கொடுத்த சம்யுக்தாவை அதே வார்த்தையை பயன்படுத்தி, இந்த டோனில் பேசினால் அது பாதிக்கும் என சொல்லிக் காட்டிய ஆரிக்கு ஆதரவாக அனைவரும் ஓட்டுப் போட்ட நிலையில், ஆரி அந்த கோர்ட் ரூம்ல கத்துனது யாருக்குமே தப்பா தெரியலையா என இரண்டாவது புரமோவிலும் தனது புலம்பலை சம்யுக்தா தொடர்கிறார்.

  சூப்பரா பேசுனாரு

  சூப்பரா பேசுனாரு

  ரியோவிடம் சம்யுக்தா இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கும் போது, அப்புறம் எல்லாரும் சூப்பரா பேசுனாரு, சூப்பரா பேசுனாரு என கை தூக்கினால் என்ன அர்த்தம் என்றும் யாருக்குமே தெரியலையா அவர் பண்ணது தப்புன்னும் கேட்கும் இரண்டாவது புரமோவை பார்த்த சம்யுக்தா ஹேட்டர்ஸ் செம ஜாலி ஆகி விட்டனர்.

  இரண்டு முறை சிறை

  இரண்டு முறை சிறை

  பிக் பாஸ் வீட்டில் இரண்டு முறை போரிங் போட்டியாளர் என முத்திரைக் குத்தப்பட்டு, கண்ணாடி சிறைக்குள் அடைக்கப்பட்ட ஆரி, இந்த வாரம் வெடித்து சிதறி, சம்யுக்தாவுக்கு எதிராகவும், பாலாவுக்கும் எதிராகவும் நின்று, சரியான பாயின்ட்களை அடுக்கி சண்டை போட்டதை கவனித்த ஹவுஸ்மேட்ஸ் அவருக்கு ஆதரவாக நின்றது சம்யுக்தாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

  தலைவர் ஆரி

  தலைவர் ஆரி

  முதல் புரமோவை பார்க்கும் போது கூட, ஒரு வேளை சோமசேகர் தலைவர் ஆக்கி காப்பாற்றப்பட்டு விடுவாரோ என எண்ணத் தோன்றியது. ஆனால், இரண்டாவது புரமோவில் அந்த டவுட்டை எடிட்டர் தெளிவாக தீர்த்து வைத்து விட்டார். ஆரி தலைவராக தேர்வானதும், நிஷா மற்றும் சோமசேகர் கை தட்டுகின்றனர். தொடர்ந்து, சம்யுக்தாவின் புலம்பலும் நீள்வதை வைத்து ஆரி தான் தலைவர் என்பது உறுதியாகிறது.

  யாருமே நியாயமா இல்லை

  யாருமே நியாயமா இல்லை

  ஒரு பொண்ணை அப்படி இன்சல்ட் பண்ணவருக்கு சாதகமா எல்லோரும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்றாங்க, என தனக்கு கிடைச்ச ஒரே ஆதரவான ஆஜீத்திடம் புலம்பி தள்ளுகிறார் சம்யுக்தா. ஆனால், இதே சம்யுக்தாவுக்கு சனம் ஷெட்டியை பார்த்தால் பெண்ணாக தெரியவில்லையா? அவ்வளவு அசிங்கமாக பேசும் பாலாவுக்கு நீங்க ஏன் சப்போர்ட் பண்ணீங்க என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

  ஷிவானி எங்கே?

  ஷிவானி எங்கே?

  பிக் பாஸ் வீட்டில் தனக்கு இன்னொரு மம்மி கிடைச்சிட்டாங்க என ஷிவானி சம்யுக்தாவை பார்த்து சொன்ன நிலையில், சம்யுக்தா இப்படி தனியா புலம்பும் போது அவர் கூடவே இல்லையே? என்கிற கேள்வியும் எழுகிறது. பாலாஜி எஸ்கேப் ஆன உடனே, ஷிவானியும் பாலாஜி பின்னாடியே போய் ஊட்டி விட போயிருப்பார் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் பண்ணி வருகின்றனர்.

  English summary
  Samyuktha feels bad for housemates voting on favor of Aari in captaincy task. Samyuktha shares her hard feeling about Aari behavior in court scene to Aajeedh.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X