கோமாளி பட நடிகைக்கு கொரோனா உறுதி… வீட்டில் தனிமையில் ஓய்வு !

சென்னை : கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அறிகுறி தென்பட்டதால் மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு

ஊரடங்கு

நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டி வருகிறது. மத்திய, மாநில அரசாங்கங்கள் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கை விதித்து கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி உள்ளன.

34,875 பாதிப்பு

34,875 பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6,297 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 365 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இந்த கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' ஜிவி பிரகாஷ் நடித்த 'வாட்ச்மேன்' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில்

வீட்டில் தனிமையில்

ஹலோ கைஸ், நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருக்கிறேன். என் பெற்றோரும் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பியதற்காக இந்த உலகத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார். அவரின் பெற்றோர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதவி கேட்டு இருந்தார்.

More from Filmibeat

Read more about: samyuktha hegde
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X