கொரோனா லாக்டவுன் நேரத்துல இப்படியொரு ட்ரிப்.. 300 கி.மீ தூரம் பைக்கில் சென்றுவந்த பிரபல ஹீரோயின்!

By

பெங்களூரு: பிரபல நடிகை ஒருவர் சுமார் 300 கி.மீ பைக்கில் சென்று வந்துள்ளார்.

Recommended Video

கொரோனா லாக்டவுன் நேரத்துல இப்படியொரு ட்ரிப்.. 300 கி.மீ தூரம் பைக்கில் சென்றுவந்த பிரபல ஹீரோயின்!

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை மத்திய அரசு நேற்று வழங்கியது. கூடவே வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

விரைவில் அனுமதி

விரைவில் அனுமதி

இதையடுத்து தமிழக அரசும் படப்பிடிப்புகளைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது. படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளின் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது, சோசியல் மீடியா. அவர்கள் அதில் அடிக்கடி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சம்யுக்தா ஹெக்டே

சம்யுக்தா ஹெக்டே

அப்படி பதிவிடும் நடிகைகளில் ஒருவர், சம்யுக்தா ஹெக்டே. இவர் விஜய் இயக்கிய வாட்ச்மேன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்தவர். கன்னடத்தில் கிரிக் பார்ட்டி, காலேஜ் குமார் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கிலும் நடித்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படத்திலும் வருண், யோகிபாபு நடித்த பப்பி படத்திலும் நடித்திருந்தார்.

கன்னட பிக்பாஸ்

கன்னட பிக்பாஸ்

இப்போதும் சில படங்களில் நடித்து வரும் இவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அங்கு இன்னும் பிரபலமானார். இவர் இப்போது தனது சமூக வலைதள படக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பைக்கில் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ள அவர், 300 கி.மீ பைக்கில் சென்றுள்ளார்.

யார் சொன்னது?

யார் சொன்னது?

இதுபற்றி அவர், வைரங்கள் பெண்களின் சிறந்த ஃபிரண்ட் என்று யார் சொன்னது? எனக்கு என் பைக்குகள்தான். பெங்களூரில் இருந்து சிக்மகளூருக்கு 300 கி.மீ வரை சென்ற எனது பயணத்தின் சிறுபகுதிதான் இது என்று கூறியுள்ளார். இதையடுத்து பலர் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

ஒருவர், இதுக்கு முன்னாடி ரேஸுக்கு போயிருக்கீங்களா? என்று கேட்டுள்ளார். பெண்களுக்கு பைக் நல்ல தோழன் தான் என்று சிலர் கூறியுள்ளனர். நடிகை இஷா ரெப்பா கடந்த சில மாதங்களுக்கு முன் பைக் ஓட்டி அதன் வீடியோவை வெளியிட்டிருந்தார். நடிகை மாளவிகா மோகனன், ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டிய வீடியோவை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X