சேலையில் செம அழகா இருக்கீங்களே சம்யுக்தா.. பானை மேல் ஒற்றைக் காலில் நிற்கும் ரியோ.. இதுவும் அன்சீனா?

சென்னை: இன்னும் என்னடா மூன்றாவது புரமோ வரலையே என பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகிக் கொண்டிருக்கும் போது, சத்தமே இல்லாமல் விஜய் மியூசிக்கில் அன்சீன் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் படு கவர்ச்சியான உடைகளையே அணிந்து வலம் வந்து கொண்டிருந்த முன்னாள் மாடல் சம்யுக்தா, சேலையில் செம அழகா இருப்பதை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.

மீண்டும் ரியோவின் சீன் அன்சீன் புரமோவிலே காட்டுறீங்களே.. அவரை ஃபைனலுக்கு கொண்டு செல்ல இப்படி ஒரு பிளானா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தீபாவளி திண்டாட்டம்

தீபாவளி திண்டாட்டம்

விஜயதசமி ஸ்பெஷல் என ஒரே அடியாக 4 மணி நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை போட்டு ரசிகர்களை மொத்தமாக வச்சி செய்தனர். இந்நிலையில், தீபாவளிக்கும் 4 மணி நேரம் பிக் பாஸ் போட்ட, அப்புறம் அடுத்த வருஷம் சீசனுக்கு விஜய் டிவியில இருந்து கூட ஒரு பையன் கலந்துக்க மாட்டான் என உணர்ந்து கொண்ட பிக்பாஸ் டீம், மாஸ்டர் பிளான் போட்டு, இந்த வாரம் முழுக்க தீபாவளி திண்டாட்டமாக மாற்றி விட்டனர்.

அடுத்த வாரம் பார்த்துக்கலாம்

அடுத்த வாரம் பார்த்துக்கலாம்

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்‌ஷன் இல்லை என்பதை கடைசியா கமலை வைத்து சொன்னாலாவது கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருக்கும். ஆனால், முதல் நாளிலேயே தீபாவளி வாழ்த்துக்களுடன் முந்திக் கொண்ட முந்திரிக்கொட்டை பிக்பாஸ் எவிக்‌ஷன் இல்லை என்றதுமே, இந்த வாரம் வச்சி செய்ய போறாங்க மாம்ஸ், அடுத்த வாரம் பார்த்துக்கலாம் என சில புத்திசாலி ரசிகர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

 புரமோ பிரச்சனை

புரமோ பிரச்சனை

பிக் பாஸ் எடிட்டருக்கும் பிக் பாஸ் இயக்குநருக்கும் என்ன வாய்க்கா தகராறு என தெரியவில்லை. முன்ன மாதிரி ஒழுங்கா பிக் பாஸ் புரமோக்கள் வருவதில்லை. எல்லாம் அந்த சனம் ஷெட்டி புகார் பிரச்சனைக்கு பிறகு விழுந்த டோஸ் தான் காரணம் என்றும் நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர். அன்சீன் புரமோ என போட்டு அதே சீனை நிகழ்ச்சியில் வைக்கின்றனர்.

அன்சீன் புரமோ

அன்சீன் புரமோ

இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ விஜய் டிவி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகவில்லை. ஆனால், அதற்கு பதிலாக விஜய் மியூசிக்கில் அன்சீன் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, போடப்பட்டுள்ள பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் சீன்கள் தான் இந்த புரமோவிலும்.

சேலையில் சம்யுக்தா

சேலையில் சம்யுக்தா

பிக் பாஸ் வீட்டில் மாடர்ன் உடைகளில் படு கவர்ச்சியாக ரசிகர்கள் கண்களை குளிரவைத்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாடல் அழகி டம்மி மம்மி சம்யுக்தா, இந்த புரமோவில் அழகா சேலை கட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். அதிலும், பானையை வைத்து அவர் நடந்து செல்லும் போது தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது என ஹவுஸ்மேட்கள் பாடுவது செம!

ஒற்றைக்காலில் பானை மீது ஏறி

ஒற்றைக்காலில் பானை மீது ஏறி

சம்யுக்தா தூக்கிட்டு நடந்து போன பானையை பிடுங்கி வைத்துக் கொண்டு விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான நடிகர் ரியோ ராஜ் அதன் மேல் ஒற்றைக் காலில் ஏறி நின்று செய்யும் சாகசத்தை தற்போது அன்சீன் புரமோவில் வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்த சீனும் நிகழ்ச்சியிலேயே ஒளிபரப்பாகும் என்றே தெரிகிறது.

நல்லா நடக்குறீங்க ஷிவானி

நல்லா நடக்குறீங்க ஷிவானி

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டு இருக்காமல், ஆஜீத்துடன் இணைந்து கொண்டு நடிகை ஷிவானி நாராயணன், இங்கும் அங்கும் ஏதோ டாஸ்க் செய்வது போலவே வாக்கிங் போவதையும் ரசிகர்கள் நோட் பண்ணி கலாய்த்து வருகின்றனர். கடைசி வரைக்கும் இவங்களை வெளியே அனுப்ப மாட்டாங்க போல தெரியுதே? 2 மில்லியன் ஆச்சே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X