twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவங்களும் டேஞ்சர் ஸோன்ல தான் இருக்காங்களாம்.. டம்மி மம்மிக்கு டாட்டா காட்டும் நேரம் வந்துடுச்சா?

    |

    சென்னை: அனிதா சம்பத், சுசித்ரா இந்த இரண்டு பேரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு சூப்பர் ட்விஸ்ட்டாக டம்மி மம்மியும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் பக்காவான புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    வரும் போதே கமல்ஹாசன் சாட்டையை சுழட்டியபடி வருவது சூப்பர்.

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள்.. அரசியல் பேசி பாலாஜியை வெளுக்கும் கமல்.. வெளியானது புரமோ! நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள்.. அரசியல் பேசி பாலாஜியை வெளுக்கும் கமல்.. வெளியானது புரமோ!

    இன்னைக்கு சம்பவம் இருக்கு

    இன்னைக்கு சம்பவம் இருக்கு

    செம ஸ்டைலாக கோட் எல்லாம் மாட்டாமல், கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் அசத்தலான புரமோ வெளியானதும். இந்த வாரம் வீட்டை விட்டு யார் வெளியே போவார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. கடந்த வாரங்கள் போல இல்லாமல், இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் பற்றிய தகவல் இன்னமும் உறுதிபடவில்லை.

    சுசித்ரா தான் வெளியேறுகிறாரா

    சுசித்ரா தான் வெளியேறுகிறாரா

    பிக் பாஸ் வீட்டில் அதகளமாக என்ட்ரி கொடுத்த சுசித்ரா, அதன் பிறகு சுருட்டி வைத்த பாய் போல ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறார். பாலாவுக்கு மட்டுமே ஜால்ரா தட்டிக் கொண்டு மத்த எல்லோரையும் திட்டிக் கொண்டு இருக்கும் சுசித்ரா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்கிற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

    அனிதாவையும் அனுப்பிடுங்க

    அனிதாவையும் அனுப்பிடுங்க

    9 ஓட்டுக்கள் பெற்ற சுசித்ராவை மட்டுமில்ல அனிதாவையும் இலவச இணைப்பாக சேர்த்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்பிடுங்க, மைக் மாட்டுங்க என சொன்னதுக்கெல்லாம் கோபித்துக் கொண்டு போகிறார் அனிதா சம்பத். நிறைய ஷார்ட் பிலிம்கள், சீரியலில் நடிக்க இந்நேரம் வாய்ப்பு குவிந்திருக்கும் அவரை வெளியே அனுப்பி விடுங்கள் எனக் கூறி வருகின்றனர்.

    டபுள் எவிக்‌ஷன்

    டபுள் எவிக்‌ஷன்

    மேலும், டபுள் எவிக்‌ஷனை அதிரடியாக கமல் கையில் எடுத்து பாலாஜி முருகதாஸுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிடுங்க பிக் பாஸ். பிவிசி டோரை அடித்து விட்டு, அதில் ஆணி குத்தி விட்டு, கையில் ரத்தம் வந்தது என அண்ட புளுகு புளுகுறான் என்றும் பாலாஜியின் பழைய நீச்சல் குளத்தில் பெண்களுடன் உல்லாசம் செய்யும் வீடியோக்களை எல்லாம் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

    Recommended Video

    பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
    டேஞ்சர் ஸோனில் சம்யுக்தா

    டேஞ்சர் ஸோனில் சம்யுக்தா

    எப்போவோ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டியது. தலைவர் பதவி கொடுத்து பாலாஜி காப்பாத்தி வைத்த சம்யுக்தா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. சுசித்ரா இன்னும் சில வாரங்கள் பாலாஜியை வறுத்தெடுப்பதற்காக பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும், இன்றைய நிகழ்ச்சி செம சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    English summary
    Not Suchitra, Samyuktha is in danger zone and she will be out from Bigg Boss house. Most fans expected double eviction too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X