கையில் கிளாஸ்...பாத்ரூமில் ஃபோட்டோஷுட்...தெறிக்கவிடும் இளம் நடிகை
சென்னை : தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து வருபவர் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து மலையாளத்திலும், கன்னடத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கிருஷ்ணா நடித்த களரி படத்திலும், ஆனந்த் நாக் நடித்த ஜுலை காற்றில் படத்திலும் நடித்தார்.

அழகிய வில்லியான சம்யுக்தா
பிறகு தமிழில் பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் மலையாளம் பக்கம் சென்று விட்டார். அங்கும் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2019 ல் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி படத்தில் வில்லியாகவும் நடித்துள்ளார் சம்யுக்தா.

இன்ஸ்டாகிராமில் பிரபலம்
ஆனால் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான சம்யுக்தா, தொடர்ந்து தனது ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார். விதவிதமாக இவர் வெளியிடும் கலர்ஃபுல் ஃபோட்டோக்கள் மிக பிரபலம். சமீபத்தில் கேரள புடவையில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றது.

பாத்ரூமில் ஃபோட்டோஷுட்
அப்படி லேட்டஸ்டாக இவர் நடத்திய ஃபோட்டோ ஷுட் வேற லெவலில் தெறிக்க விட்டுள்ளது. கையில் கிளாஸுடன், பாத்ரூமில் பாத்டப்பில் அமர்ந்து ஃபோட்டோஷுட்டை நடத்தியது தான் தற்போது சம்யுக்தாவை மிக பிரபலமாக்கி உள்ளது.

டிரெண்டாகும் பாத்ரூம் ஃபோட்டோஸ்
சமீப நாட்களாக நடிகைகள் பாத்ரூமிலும், பாத் டப்பிலும் ஃபோட்டோஷுட் நடத்துவது டிரெண்ட் ஆகி வருகிறது. ஆன்டிரியா தொடங்கி பல நடிகைகள் பாத்ரூமில் ஃபோட்டோஷுட் நடத்தி விட்டனர். அந்த வரிசையில் தற்போது சம்யுக்தாவும் இணைந்துள்ளார்.

வைரலாகும் ஃபோட்டோஸ்
சம்யுக்தா இந்த ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட 3 மணிநேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். பாத்ரூமில் ஜுஸா என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











