அனிதா ஓவர் ரியாக்டிங்.. நெகட்டிவ் வைப்ஸ் கொடுக்குறாங்க.. போட்டோவை போட்டு எரித்த சம்யுக்தா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாமினேஷன் புராசஸில் அனிதாவை நாமினேட் செய்தார் சம்யுக்தா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று திங்கள் என்பதால் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு வேண்டாத போட்டியாளர்கள் இருவரை நாமினேட் செய்து கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் போட்டோக்களை எரியும் நெருப்பில் போட்டனர்.

சம்யுக்தா காரணம்
அதன்படி பிக்பாஸில் பெரும்பாலானவர்களின் ஆதரவை பெற்றுள்ள சம்யுக்தா இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்தார். முதலில் அனிதாவை நாமினேட் செய்த சம்யுக்தா அதற்கான காரணத்தையும் கூறினார்.

ஓவர் ரியாக்டிங்
அதாவது அனிதா ரொம்ப எமோஷனல் கேரக்டராக உள்ளார். எல்லாவற்றுக்கும் ஓவர் ரியாக்டிங் செய்து வருகிறார். கமல் சார் வந்த ஓபன் டிஸ்கஷனில் கூட அவரைப் பற்றி ஏதாவது சொன்னால், உடனே எல்லார்க்கிட்டேயும் அதைப்பத்தி டிஸ்கஸ் செய்கிறார்.

நெகட்டிவ் வைப்
அந்த இடத்தையே நெகட்டிவ் வைப்ஸாக்கி விடுகிறார் அனிதா என்றார். தொடர்ந்து ரியோவை நாமினேட் செய்த சம்யுக்தா அவர் கேப்டன்ஷிப்பின் போது பார்ஷியாலிட்டியுடன் நடந்து கொண்டதாக கூறினார். அவருக்கு வேண்டியவர் தவறு செய்தால் தட்டிக் கேட்கவில்லை என்றார்.

அனிதா சொன்ன காரணம்
தொடர்ந்து வந்த அனிதா, முதல் ஆளாய் சம்யுக்தாவை நாமினேட் செய்தார். சம்யுக்தா ரொம்பவே டிப்லமேட்டிக்காக இருப்பதாக கூறினார். மேலும் என்ன பிரச்சனை என்றாலும் சைலன்ட்டாக இருப்பதாக கூறி நாமினேட் செய்தார் அர்ச்சனா.

கேபி ஹர்ட் பண்ணுது
அடுத்து கேப்ரியல்லாவை நாமினேட் செய்தார் அனிதா.
அதற்கான காரணமாக சீரியஸான சில விஷயங்களை சிரிச்சுக்கிட்டே சொல்லிவிடுகிறார். அது என்னை மட்டுமின்றி எல்லோரையும் ரொம்பவே ஹர்ட் பண்ணுது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











