100 கோடி வசூலித்த வாத்தி... படம் தோல்வி எனக் கூறி சம்பளம் வாங்க மறுத்த சம்யுக்தா!

சென்னை: மலையாளத்தில் பாப்கார்ன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சம்யுக்தா மேனன்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸியாக வலம் வரும் சம்யுக்தா நடிப்பில், இறுதியாக வாத்தி திரைப்படம் வெளியானது.

வெங்கி அட்லூரி இயக்கிய வாத்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா.

சமீபத்தில் தனது பெயரின் பின்னால் இருந்த மேனன் என்ற சாதி அடையாளம் வேண்டாம் என நிராகரித்த சம்யுக்தா, சம்பள விசயத்திலும் அப்படி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 முன்னணி நடிகை சம்யுக்தா

முன்னணி நடிகை சம்யுக்தா

மலையாளத்தில் 2016ம் ஆண்டு வெளியான பாப்கார்ன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். மலையாளம், தெலுங்கு, தமிழ் என ரவுண்டு கட்டி வரும் அவரது நடிப்பில் இறுதியாக வாத்தி திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. தனுஷ் ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்த இந்தப் படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

 100 கோடி வசூலித்த வாத்தி

100 கோடி வசூலித்த வாத்தி

இந்தப் படம் கடந்த மாதம் 17ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. தமிழில் வாத்தி, தெலுங்கில் சார் என்ற டைட்டிலில் வெளியான இந்தப் படம் இதுவரை 100 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளது. தனுஷுடன் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் சக்சஸ்க்கு நடுவே தனது பெயரில் இருக்கும் மேனன் என்ற சாதி அடையாளம் தேவையில்லை என சம்யுக்தா கூறியிருந்தார். மேலும், இனி தன்னை சம்யுக்தா என்று அழைப்பதே போதும் என்றிருந்தார்.

 சம்பளம் வாங்க மறுப்பு

சம்பளம் வாங்க மறுப்பு

மேனன் என்ற சாதி பெயரை துறந்த சம்யுக்தா, சம்பளமும் வாங்க மறுத்த கதை தற்போது வைரலாகி வருகிறது. வாத்தி திரைப்படம் மூலமே கோலிவுட் ரசிகர்களிடம் பெரியளவில் பிரபலமானார் சம்யுக்தா. முன்னதாக 2019ம் ஆண்டு மலையாளத்தில் எடக்காடு பட்டாலியன் 06 என்ற படத்தில் நைனா பாத்திமா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சம்யுக்தா சம்பளம் வாங்க மறுத்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 சம்யுக்தாவின் பெருந்தன்மை

சம்யுக்தாவின் பெருந்தன்மை

அதாவது, எடக்காடு பட்டாலியன் 06 (Edakkad Battalion 06) திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படம் வெளியாகும் முன்பு, சம்யுக்தாவுக்கு 65% சம்பளம் மட்டுமே கொடுத்திருந்தேன். அதனால், இரண்டு நாட்கள் கழித்து சம்யுக்தா ஒரு மெசேஜ் அனுப்பினார். படம் தோல்வி அடைந்ததால் மீதமுள்ள சம்பளத்தை எனக்கு கொடுக்க வேண்டாம், நீங்கள் கொடுத்தாலும் நான் வாங்கமாட்டேன். அதற்கு பதிலாக இன்னொரு படத்தில் பணியாற்றலாம் எனக் கூறினார். முழு சம்பளத்தை கொடுத்தால் தான் டப்பிங், ப்ரோமோஷனுக்கு வருவேன் என சொல்லும் நடிகர்கள், நடிகைகள் மத்தியில் சம்யுக்தா சிறப்பானவர் என கூறியுள்ளார்.

 ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

சம்யுக்தாவின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் தான் இனிமேல் தன்னை சம்யுக்தா என அழைத்தால் போதும், சம்யுக்தா மேனன் என்ற பெயர் வேண்டாம் எனக் கூறியிருந்தார். இப்போது தோல்வியடைந்த படத்திற்கு சம்பளம் வாங்கவும் மறுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாத்தியைத் தொடர்ந்து மலையாளத்தில் பூமரங் என்ற படத்தில் நடித்து வருகிறார் சம்யுக்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X