For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் ஃபிரிட்ஜுக்குள்ளே என்ன இருக்கு வந்து பாருங்க.. எப்படி வேடிக்கை காட்டுகிறார் பாருங்க சம்யுக்தா!

    |

    சென்னை : பிரபல மாடலான சம்யுக்தா, ராதிகா நடித்த சந்திரகுமாரி சீரியலில் ருத்ரா என்ற கேரக்டரில் நடித்தார். அதற்கு பிறகு பெரிய வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்காமல் இருந்த இவருக்கு விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வெளியேறிய பிறகு இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவான சம்யுக்தா, தொடர்ந்து தனது ஃபோட்டோ மற்றும் பிக்பாஸ் பிரபலங்களுடன் தான் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    ஜம்பிங்கம்.. பம்பிங்கம்மாம்.. ஒரே மரண பங்கமா இருக்கே.. பாவனா, சம்யுக்தா வெறித்தனம்தான் போங்க!ஜம்பிங்கம்.. பம்பிங்கம்மாம்.. ஒரே மரண பங்கமா இருக்கே.. பாவனா, சம்யுக்தா வெறித்தனம்தான் போங்க!

    விரைவில் வெள்ளித்திரையில் சம்யுக்தா

    இதற்கிடையில் சம்யுக்தாவிற்கு பட வாய்ப்புக்களும் குவிந்து வருகிறது. விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார், கவுதம் கார்த்திக் நடிக்கும் படம் உள்ளிட்ட படங்களில் நடிக்க சம்யுக்தாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் விரைவில் அவர் வெள்ளித்திரையிலும் தோன்ற உள்ளார்.

    ஃபிரிட்ஜ் டூர் போலாமா

    ஃபிரிட்ஜ் டூர் போலாமா

    இத்துடன் சம்யுக்தா யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் தன்னை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அவரே வெளியிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் ஃபிரிட்ஜ் டூர் என்ற தலைப்பில், தன் வீட்டு ஃபிரிட்ஜில் என்னென்ன பொருட்கள் உள்ளது என திறந்து காட்டி உள்ளார்.

    வடிவேலு டயலாக்குடன் வீடியோ

    வடிவேலு டயலாக்குடன் வீடியோ

    ஃபிரிட்ஜ் டூர் என்றதும் ஏதோ ஸ்பெஷலாக வைத்திருப்பார் என பார்த்தால் வழக்கமாக எல்லோருடைய வீட்டு ஃபிரிட்ஜில் என்ன இருக்குமோ அதே பொருட்கள் தான் தன் வீட்டு ஃபிரிட்ஜிலும் இருப்பதாக சொல்லி அவரே சப்பென்று ஆக்கிவிட்டார். அத்துடன் வீடியோவின் பேக்கிரவுண்டில் வடிவேலு டயலாக்குகள் வேறு.

    தன்னை தானே கலாய்த்த சம்யுக்தா

    தன்னை தானே கலாய்த்த சம்யுக்தா

    மற்றவர்கள் கலாய்த்து விடக் கூடாது என நினைத்தாரோ என்னவோ, தன்னை தானே கலாய்த்தும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஃபிரிட்ஜில் தான் வைத்திருப்பதாக சொல்லி பேச ஆரம்பிக்கும் சம்யுக்தா, சில டப்பாக்களை காட்டி, இதில் என்ன இருக்கிறது என எனக்கே தெரியாது என கூறுகிறார். வேடிக்கையான இந்த வீடியோவை பார்த்து ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.

    English summary
    Samyuktha's funny fridge tour video with vadivelu dialogue winning lot of hearts
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X