பிரச்சனையே நடக்காத மாதிரி போயிடணும்.. நல்லா திசை திருப்புறீங்க பிக்பாஸ்.. 3வது புரமோவில் இதுதான்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி கொளுத்திப் போட்ட விவகாரம் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோக்கள் அந்த பிரச்சனைக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல அப்படியே டிராக்கை மாற்ற நல்லாவே முயற்சி செய்கின்றன.
மூன்றாவது புரமோவில், சம்யுக்தாவின் மகன் ரயானின் பிறந்தநாளை வைத்து ஓட்டி விட்டனர்.

ஆரி சம்யுக்தா வழக்கு
இந்த வாரம் தலைவியாக சம்யுக்தா மாறியதில் இருந்தே, அவருக்கு கூடுதல் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்படுகிறது. ஸ்பேஸ் கேட்கும் அனிதாவுக்கும், ஸ்பேஸை அடைத்துக் கொண்டிருந்த அர்ச்சனாவுக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலா சனம் வழக்கிலேயே சண்டை போட்ட ஆரி மற்றும் சம்யுக்தாவின் ரியல் வழக்கு இன்றைய முதல் புரமோவில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது.

ஊட்டி விட்டு ரொமான்ஸ்
இந்த சீசனில் எப்படியாவது நீங்க ரெண்டு பேரும் தான் லவ் ஜோடியா ஆக்ட் பண்ணணும் என கட்டாயத்தின் பேரிலே ஷிவானியையும் பாலாஜியையும் நடிக்க வைப்பது போலவே இருக்கும் அவர்களது லவ் டிராக்கில், கேபிக்கு கடலை போட்டுக் கொண்டே, ஆஜீத் குறுக்கே நந்தியாக மாறும் இரண்டாவது புரமோவே லேட்டா போட்டதிலே ஏதோ வில்லங்கம் நடந்திருக்கு என ரசிகர்கள் சந்தேகிக்க தொடங்கி விட்டனர்.

சம்யுக்தா மகன் பிறந்தநாள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, கொஞ்சமும் அந்த பக்கம் கவனத்தை திருப்பி விடக் கூடாது என்பதற்காக, சம்யுக்தாவின் மகன் ரயானின் பிறந்தநாள் வீடியோவையும் அழுகாச்சி சீனையும் மூன்றாவது புரமோவாக போட்டு தற்போது எடிட்டர் நிகழ்ச்சியை நல்லாவே சேவ் பண்றாரு..

என்ன ஒரு நடிப்பு
ஏதோ மகனை பல ஆண்டுகளாக பிரிந்த தாய் கூட இப்படி அழுது கண்ணீர் வடிக்க மாட்டார். சின்ன குழந்தையே ஆங்கிலத்தில் அழகாக, அம்மா இன்று எனது பிறந்தநாள் என பாட்டி உடனும் உறவினர்களுடனும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் போது, இதிலும் ஏன் போலித்தனமான நடிப்பை சம்யுக்தா டி.ஆர்.பிக்காக காட்ட வேண்டும் என்றே ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











