அனிதாவே சில்லுன்னு இருக்கா.. இந்த சனம் ஏத்தி விடுறா.. ரொம்ப தப்பு.. சம்யுக்தாவோட மாஸ்க் கிழியுதோ?

சென்னை: அனிதாவே சில்லுன்னு இருக்கா.. இந்த சனம் ஏத்தி விடுறா என தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் சம்யுக்தா பேசுவதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே இரிடேட் ஆகி உள்ளனர்.

முதல் இரண்டு புரமோக்களிலும் ஆரியை ஹைலைட் பண்ண பிக் பாஸ் எடிட்டர், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அனிதா, சம்யுக்தா பிரச்சனையை மூன்றாவது புரமோவில் வைத்து இருக்கிறார்.

சம்யுக்தா நேத்து பண்ணதுக்கு சீக்கிரமே அனிதா வச்சு செய்வார் என்றே தெரிகிறது.

புருஷனை பத்தி பேச்சு

புருஷனை பத்தி பேச்சு

முன்னாள் மாடல் அழகியான சம்யுக்தா பேசும் போது, தனது குழந்தையை பற்றி, அம்மாவை பற்றி மற்றும் கணவரை பற்றி பேசி அழுதார். எல்லார் ஹவுஸ்மேட்ஸும் சொல்லி வச்சதை போலவே அளவாக பேசி, அழ வேண்டிய இடத்தில் அழுதனர். ஆனால், அனிதா சம்பத் பேசும் போது சம்யுக்தா இடைமறித்து அவரை அசிங்கப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது.

இந்தியளவில் டிரெண்டிங்

இந்தியளவில் டிரெண்டிங்

அனிதா சம்பத் ஹாஷ்டேக் நேற்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிகிட்டு இருக்கும் போதே இந்தியளவில் டிரெண்டானது. அனிதா சம்பத் அவருடைய கருத்தை பேசுகிறார். அதை வைத்து காமெடி பண்ணுவதும், சம்யுக்தா பேச்சை நிறுத்த சொல்வதும் தவறான செயல் என ஏகப்பட்ட ரசிகர்கள் அனிதாவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

சனம் ஏத்தி விடுறா

சனம் ஏத்தி விடுறா

சம்யுக்தாவுக்கும் அனிதாவுக்கும் என்ன பிரச்சனை ஆச்சு என்பதை காட்டாமலே நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது. இந்நிலையில், இப்போ வெளியாகி உள்ள 3வது புரமோவில், அனிதாவும் சனம் ஷெட்டியும் பேசிட்டு இருக்கும் போது, சம்யுக்தா செய்தது சரி இல்லை என சனம் கூற, சம்யுக்தா, அனிதாவே சில்லுன்னு இருக்கா இந்த சனம் ஏத்தி விடுறா என அப்படி ஒரு ஆட்டம் ஆடுகிறார்.

பிக் பாஸ் சொல்லல

பிக் பாஸ் சொல்லல

இவ்ளோ நேரம் தான் பேச வேண்டும் என பிக் பாஸ் எந்த டைம் லிமிட்டும் வைக்கல என சனம் ஷெட்டி சரியா பாயின்ட் எடுத்துப் பேசியதை கேட்டதும் சம்யுக்தாவுக்கு கோபம் பொத்துகிட்டு வந்துடுச்சு. ஆரியிடம் இதை சனம் ஷெட்டி பஞ்சாயத்து பண்ணவே, இருவரையும் எல்லாரும் சேர்ந்து ஜெயிலுக்குள் தள்ளுகின்றனர் என்றே தெரிகிறது.

சம்யுக்தா மாஸ்க் கிழியுது

சம்யுக்தா மாஸ்க் கிழியுது

சம்யுக்தா தனது பணக்காரத் திமிரை காட்டுகிறார் என்றும், பாலாவுக்கு ஷிவானிக்கு ஒண்ணுன்னா ஓடி ஓடி பஞ்சாயத்து பண்ற சம்யுக்தா, அனிதாவுக்கு மட்டும் பாரபட்சம் கட்டுவது ரொம்பவே தவறான விஷயம் என்றும், சம்யுக்தாவின் மாஸ்க் இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சமாக கிழியுதுன்னும் கருத்துக்கள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X