பொம்பளைய மதிக்கத் தெரியாதவன்லாம் பிக் பாஸ்க்கு வந்துட்டான்.. ஆரியை திட்டிய சம்யுக்தா.. பாலாவுக்கு?

சென்னை: பிக் பாஸ் நீதிமன்ற செட்டப்பை பயன்படுத்திக் கொண்டு, பாலாஜி முருகதாஸ் மற்றும் சம்யுக்தாவுக்கு சரியான செருப்படியை ஆரி கொடுத்ததாக பிக் பாஸ் ரசிகர்கள் #Aari என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆரி மற்றும் சம்யுக்தா இடையே ஆன வழக்கு நீதியும் நேர்மையும் நல்லா நிறைந்த பிக் பாஸ் வீட்டு கோர்ட்டுக்கு வந்தது.

யார் பக்கம் அதிகமா கை தூக்க ஆள் இருக்காங்களோ அவங்களுக்கு தீர்ப்பு சொல்லும் சுசித்ராவுக்கு எதுக்கு நீதிபதி பதவி கொடுத்தாங்கன்னே தெரியல?

பாலாஜி தான் காரணம்

பாலாஜி தான் காரணம்

சம்யுக்தா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக பொறுப்பேற்க பாலாஜி முருகதாஸ் தான் காரணம் என மூச்சுக்கு முன்னூறு தடவை அடித்துச் சொல்லும் ஆரி, பிக் பாஸ், எப்படி வேண்டுமானாலும் கேம் ஆடலாம் என பாலாவுக்கு ரூட் போட்டுக் கொடுத்ததை ஏன் தான் புரிந்து கொள்ள மறுக்கிறார் என்பது தான் புரியவில்லை.

சம்யுதாவுக்காக வாதாடிய பாலா

சம்யுதாவுக்காக வாதாடிய பாலா

பாலா வந்து ஒருத்தர் பக்கம் வாதாடும் போதே, நம்ம ஃபேக் ஜட்ஜ் சுச்சி அந்த கட்சிக்குத்தான் தீர்ப்பு சாதகமாக கொடுப்பாங்கன்னு தெரிஞ்சு போச்சு, அப்புறம் எதுக்கு காச்சு மூச்சுன்னு கத்திட்டு இருக்கணும். பாலாஜி முருகதாஸ் மீண்டும் சம்யுக்தாவுக்காக வந்து நின்று, ஆமாம் நான் தான் அவங்களை எனக்காக தலைவர் ஆக்கிக்கிட்டேன் என்று பேசுவது போல பேசிச் சென்றார்.

இதுதான் சமயம்

இதுதான் சமயம்

சனம் ஷெட்டியை பாலா தறுதலைன்னு சொன்னதை காமெடி என்று எடுத்துக் கொண்ட நீதிபதி மற்றும் ஹவுஸ்மேட்கள் முன்னிலையில், அதே கசப்பு மருந்தை பயன்படுத்தி சம்யுக்தாவை டார் டாராக கிழித்துத் தொங்க விட்டார் ஆரி. இப்போ மட்டும் சம்யுக்தாவுக்கு வலிக்குதோ? என ரைகர்கள் கமெண்ட் அடித்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சம்யுக்தாவுக்கு சாதகமாக

சம்யுக்தாவுக்கு சாதகமாக

தெரிந்த விஷயம் தானே, என்பது போல மறுபடியும் கைகளை தூக்க சொல்லி சுசித்ரா நீதிபதி டோட்டல் நீதித்துறையே அசிங்கப்படுத்துவது போல செயல் பட்டு, சம்யுக்தாவுக்கு ஆக்சுவலா பாலாஜிக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்து விட்டார். ஆரிக்கு இப்படி நடக்கும் என முன்பே தெரிந்து தான் சம்யுக்தாவை அத்தனை முறை ‘தறுதலை'ன்னு மறைமுகமாக திட்டித் தீர்த்து விட்டார்.

பொம்பளைய மதிக்கத் தெரியாதவன்

பொம்பளைய மதிக்கத் தெரியாதவன்

பொம்பளைய மதிக்கத் தெரியாதவன்லாம் பிக் பாஸ்க்கு வந்துட்டான் என கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த சம்யுக்தா ஆரியை ஒருமையில் பேசியதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், சம்யுக்தாவை சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்து வருகின்றனர். சம்யுக்தா நீ மொதல்ல வீட்டை விட்டு வெளியே போ என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

பாலாஜி சொன்னப்போ இனிச்சிதா

பாலாஜி சொன்னப்போ இனிச்சிதா

ஆரியை பார்த்து பொம்பளைய மதிக்கத் தெரியாதவன்னு சொல்றீங்களே சம்யுக்தா, அதே சனம் ஷெட்டியை பார்த்து பாலாஜி முருகதாஸ் தறுதலைன்னு திட்டும் போது, பொண்ணான சனம் ஷெட்டிக்கு சப்போர்ட் பண்ணாம, உங்களை சீட் பண்ணி தலைவராக்கின பாலாஜிக்கு ஏன் சப்போர்ட் பண்றீங்க என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X