எங்க போனாலும் அதைத்தான் கேட்டாங்க.. ஓவர் ஆக்ட் செய்த சாம்.. ஒத்து ஊதிய ரம்யா.. கண்ணீர் விட்ட பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார் சம்யுக்தா. ஓவர் ஆக்ட் செய்த சம்யுக்தாவுக்கு ரம்யா ஒத்து ஊதியது ரசிகர்களை கடுப்பேற்றியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன் தினம் அர்ச்சனா, ரமேஷ், நிஷா, ரேகா என நான்கு பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.
இந்நிலையில் 100வது நாளான நேற்று, சுச்சி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஆஜித், வேல் முருகன் உள்ளிட்டோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர்.

உசுப்பேத்திய சம்யுக்தா
அந்த வகையில் வந்த சம்யுக்தா, ஆரியை தவிர அனைத்து ஹவுஸ்மேட்டுகளையும் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து ரம்யாவிடம் மாஸ் காட்ற போ என்று கூறி உசுப்பேத்தி விட்டு பாலாஜியை தேடினார்.

சம்யுக்தாவுடன் கண்ணீர்
அந்த நேரத்தில் பாலாஜி பிக்பாஸ் வீட்டுக்குள் சுச்சியுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தார். பின்னர் ரம்யாவுடன் உள்ளே வந்த சம்யுக்தாவை பார்த்த பாலாஜி, ஐ மிஸ்டு யூ என்று கலங்கியப்படியே அவரை கட்டியணைத்தார்.

பாலாஜிக்கு ஸ்போர்ட்ஸ் பர்சன்
தொடர்ந்து பேசிய சம்யுக்தா, போன் இன்டர்வியூ எல்லாம் பாலாஜிக்கு ஃபேவரா இருந்தீங்கன்னு கேட்டாங்க. நான் எங்கடா இருந்தேன் நினைச்சுட்டேன். வெளியே போய் பாலாஜிக்கு ஸ்போர்ட்ஸ் பர்சன் மாதிரி இருந்தேன் என்று எதுவுமே தெரியாதவர் போல் பேசினார்.

ஆரி பற்றி குறை..
அப்போது பேசிய ரம்யா, சண்டை நடந்தப்போ சமாதானாப்படுத்தி பாலாஜியை கூட்டிட்டு போனதுக்கே ஒன் சைடா இருக்கேன்னு சொல்லிட்டாங்க என்று அவர் பங்குக்கு அவரும் ஆரி குறித்து புறணி பேசினார். பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆரி மட்டும் தனிமையில் இருப்பதாகவும் மற்ற அனைவரும் ஒன்றாக இருப்பதாகவும் தெரிகிறது.

மொத்தமும் கேங்காக
மேலும் தேவையில்லாமல் ஆரியை வம்பிழுப்பதும் நேற்றைய எபிசோடில் தெரியவந்தது. ஏற்கனவே அர்ச்சனா, ரமேஷ் ஆகியோர் ஆரியிடம் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகின்றனர். இதனால் கடுப்பாகியுள்ள ரசிகர்கள் இவர்களை முதலில் வெளியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











