Just In
- 47 min ago
'நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேரக் கட்டாயம்' நடிகர் ராஜ்கிரண் பொங்கல் வாழ்த்து!
- 55 min ago
கே.ஜி.எஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபல ஹீரோ!
- 2 hrs ago
நடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்!
- 2 hrs ago
மேக்கப் இல்லாமல் ரசிகர்களை மயக்கும் ஸ்ரீதிவ்யா.. உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்!
Don't Miss!
- Finance
பில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்!
- Automobiles
ஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...
- News
இப்ப கழிவுநீரை அகற்ற முடியுமா முடியாதா...? ராமநாதபுரம் நகராட்சியை அலறவிட்ட மணிகண்டன் எம்.எல்.ஏ..!
- Lifestyle
2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்த மாடல்கள்!
- Sports
2021ன் முதல் சதம்... இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் அபாரம்... வெல்டன் ரூட்!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன கலீஜ்னு எப்படி சொல்லலாம்.. சம்யுக்தாவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி.. செம சண்டை!
சென்னை: பாலாஜி முருகதாஸுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே நல்லா கொளுத்திப் போட்ட பிக் பாஸ், அடுத்ததாக சனம் ஷெட்டிக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே தனது நாரதர் வேலையை ஆரம்பித்தார்.
கஸ்டமர் கேர் நபர்களுடன் இதற்கு முன்னதாக சம்யுக்தா பேசியிருக்கக் கூட மாட்டார் போல, அவருக்கு அந்த ரோல் கொடுத்தால், அதில் ஒழுங்கா பொருந்தி நடிக்கக் கூட தெரியவில்லை.
சனம் ஷெட்டி, கலீஜ் பிரச்சனையை கையில் எடுத்தும் சம்யுக்தாவிடம் ஜெயிக்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயம் தான்.
ரொம்ப குத்துறாங்கடா.. எல்லாருமே பொய்யா இருக்காங்க.. ரியோவை கட்டியணைத்து கதறிய நிஷா!

அக்ரம டிவி
அகம் டிவி என சொல்லிவிட்டு, எல்லா அக்ரமங்களையும் அம்பலப்படுத்தும் டிவியாக இப்போ அது மாறி விட்டது. சுரேஷ் தாத்தா ஸ்கெட்ச் போட்டு பேசியதையே போட்டுக் கொடுத்த நிலையில், இப்போ, தொடர்ந்து அதே ஜித்து வேலையை பிக் பாஸ் நல்லாவே செய்ய ஆரம்பித்து, சீக்கிரமே ஹவுஸ்மேட்களை ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு கொண்டு போய் விடுவார் போல் தெரிகிறது.

கஸ்டமர் வார்
கஸ்டமர் கேர் டாஸ்க்குக்கு பதிலாக கஸ்டமர் வார் என இந்த டாஸ்க்கிற்கு பேர் வைத்திருக்கலாம். பொதுவாக, கஸ்டமர் கேருக்கு போன் பேசுபவர்கள் தான் கஸ்டமர் கேர் ஊழியர்களை அழ விடுவார்கள். ஆனால், இங்கே அதற்கு மாறாக, கஸ்டமர் கேர் ஊழியர்கள் கதற விடுவது வேடிக்கையாக இருக்கிறது.

சர்ச்சையை கிளப்பிய புரமோ
நேற்றைய பிக் பாஸ் புரமோக்கள் மூன்றுமே வேற லெவல். ஒவ்வொன்றும், குரூரத்தின் உச்சமாக தெறித்தன. முதல் இரு புரமோக்கள் பாலாவுக்கும், அர்ச்சனாவுக்கும் ஏற்படும் மோதல்களை காட்டிய நிலையில், மூன்றாவது புரமோ, சம்யுக்தா - சனம் ஷெட்டி இடையே ஏற்பட்ட கலீஜ் சண்டையை அம்பளப்படுத்தி சமூக வலைதளத்தில் பெரிய சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. நிகழ்ச்சி அதை விட சூடாக இருந்தது.

சரியாக கேட்ட சனம்
அர்ச்சனா அக்கா பாலாஜி முருகதாஸிடம் பர்சனல் விஷயங்களை கேட்டது போல வரம்பு மீறி ஒரு வார்த்தை கூடாத பேசாத சனம் ஷெட்டி, என்ன எப்படி நீங்க கலீஜ்னு சொல்வீங்க என டைரக்டாக அவருக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே நடந்த சண்டை குறித்து மட்டுமே பேசினார்.

கலீஜ்னா என்ன?
கஸ்டமர் கேர் விவகாரத்துக்கு முன்னதாகவே சனம்க்கும் சம்யுக்தாவுக்கு கலீஜ் பிரச்சனை நடந்துள்ளது. அது குறித்து போன் பண்ணி பேச ஆரம்பித்த சனம், டம்மி மம்மியிடம் கலீஜ்ன்னு ஏன் சொன்னீங்க? கலீஜ்னா என்ன அர்த்தம் என்று கேட்டார். ஆள் பார்க்க அழகா இருக்கீங்களே தவிர, பேசுறது எல்லாம் ரொம்ப கலீஜா இருக்கு ரொம்ப கேவலமா பேசுறீங்க என சம்யுக்தா ரொம்ப தெனாவட்டாக பேசியது எல்லாரையும் கடுப்பேற்றியது.

கேப்டன் ஆன லட்சணம்
ஒரு பொண்ணை எப்படி நீங்க அப்படி இன்சல்ட் பண்ணலாம் அதுக்கு உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என சனம் ஷெட்டி, கேட்டதற்கு, கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல், நான் கேப்டனாகி இருக்கேன். ஹவுஸை ஒரு வாரம் பார்த்துருக்கேன் என்றார். நீங்க எப்படி கேப்டன் ஆனீங்க என்கிற லட்சணம் தான் தெரியுமே என சனம் வெளுத்து விட்டார்.

பொறப்ப பத்தி பேசாதீங்க
மேலும், சனம் ஷெட்டி, கலிஜின்னு சொல்றவங்க மனசுதான் ரொம்ப கலிஜா இருக்கும் என சரியான செருப்படியை சம்யுக்தாவுக்கு கொடுத்து விட்டு, தலைவர் ஆனது குறித்த பிரச்சனை கிளம்ப, அவங்க பொறப்பு அப்படி இருக்கும் என சம்யுக்தா, ஆரியை வம்பிழுக்க, டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஆரி காண்டானார். ஆனால், சனம் மத்தவங்க பொறப்ப பத்தி நீங்க பேசாதீங்க, அது தப்பான விஷயம் என சரியாக கண்டித்து டம்மி மம்மியின் மூக்கை உடைத்தார்.

ஈஸி டார்கெட்
நான் ஒரு ஈஸி டார்கெட்னால என்ன பத்தி நீங்க அப்படி பேசாதீங்க என சனம் சொன்னதும், நக்கலாக சிரித்த சம்யுக்தா, நீங்க ஈஸி டார்கெட்டா? ஆரி, பாலா எல்லாம் பயந்துகிட்டு வந்து உங்ககிட்ட ஸாரி கேட்குறாங்க என மீண்டும் சனம் ஷெட்டியை நல்லாவே வம்புக்கு இழுத்தார். அடுத்தவங்கள இழுத்து பேசாதீங்க டைரக்ட்டா பேசுங்க என சனம் வெளுத்து வாங்கினாலும் போனை சம்யுக்தா வைக்காமல் ஜெயித்து விட்டார்.

நிஜ முகம்
பிக் பாஸ் போட்டியாளர்களின் நிஜ முகங்கள் ஒவ்வொன்றும் இப்போது தான் வெளியாகுது என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். சனம் ஷெட்டி மற்றும் ஆரி தனி நபர்களாக விளையாடி வருகின்றனர் என்றும், கலீஜ் பிரச்சனையை கிளப்பிய சம்யுக்தா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்றும் அடித்து சொல்லி வருகின்றனர்.