அவன் எப்படி என் தாய்மையை பேசலாம்? ஆரியை மீண்டும் தரக்குறைவாக பேசிய டம்மி மம்மி சம்யுக்தா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை மீண்டும் சம்யுக்தா, அவன் இவன் என்று தரக்குறைவாக பேசியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த சம்யுக்தா, அர்ச்சனா மற்றும் சோமிடம் அவன் எப்படி என் மதர்ஹுட்ட தவறா பேசலாம் என்று கண்ணீர் வடித்தார்.
இவன் யாரு என் மதர்ஹுட் பத்தி பேச என்றும் கண்ணீர்விட்டார். நிச்சயம் ஆரியைதான் சொல்லியிருப்பார் என்று அப்போதே ரசிகர்கள் கூறி வந்தனர்.

வளர்ப்பு சரியில்லை
இந்நிலையில் கால் செண்டர் டாஸ்க்கில் பேசிய சனத்திடம், நான் கேப்டனாது பலருக்கு பிடிக்கவில்லை. அது அவரவர், வளர்ப்பு என சனம் ஷெட்டியையும் ஆரியையும் குத்தி காட்டி பேசினார்.

தறுதலை விவகாரம்
சம்யுக்தா பாலாஜி மூலம் கேப்டன் ஆன போது ஆரி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் சனமை தறுதலை என்று பாலாஜி சொன்னதை ஒரு கேப்டனாக கண்டிக்கவில்லை என கோர்ட் டாஸ்க்கின் போதும் விளாசினார்.

வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்கு
அப்போதே பொம்பளையை மதிக்க தெரியல இவன்லாம் வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்கு என்று தரக்குறைவாக பேசினார். தொடர்ந்து பல முறை ஆரியை பின்னால் மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறார் சம்யுக்தா.

என் அப்பா அம்மாவ தெரியுமா?
இந்நிலையில் டாஸ்க் முடிந்து உள்ளே வந்த சம்யுக்தாவிடம் வளர்ப்பு சரியில்ல என்று எப்படி சொன்னீங்க? எங்க அப்பா அம்மா பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். நான் உங்களை சொல்லவில்லை பொதுவாக சொன்னேன் என்றார்.

என் தாய்மை பற்றி
மேலும் என்னுடைய தாய்மையை எப்படி நீங்கள் கேள்விக் கேட்கலாம்? என்றார். அதற்கு உங்கள் தாய்மையை பற்றி நான் ஒரு இடத்திலும் பேசவில்லை. 18 வயசு பையன் ஒரு அம்மாவாக இருப்பவரை விட சிறப்பாகதான் செய்தார் என்றேன்.

பாலா வக்காளத்து
நீங்கள் எப்படி என் வளர்ப்பு சரியில்லை என சொல்லலாம்? நான் உங்களை ஒரு இடத்திலும் தவறாக பேசவில்லை என்றார் ஆரி. அப்போதும் குறுக்கிட்ட பாலாஜி, சம்யுக்தா அப்படி பேசவே இல்லை என்று வக்காளத்து வாங்கினார். சனம், ரம்யா ஆகியோரும் வளர்ப்பை பற்றி பேசுவது தவறு என்றனர்.

தரக்குறைவான பேச்சு
இதனை தொடர்ந்து நான் பேசியது உங்களை ஹர்ட்டாக்கியிருந்தால் சாரி என்று கூறிவிட்டு சென்றார். இருந்த போதும், பாலாஜி ஷிவானி ஆகியோரிடம் ஆரி குறித்து பேசிக்கொண்டிருந்தார். தொடர்ந்து ஆரியை பின்னால் தரக்குறைவாக சம்யுக்தா பேசி வருவது முகம் சுளிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











