பாலாஜி கேப்டனாக்குனதாலதான் நீங்க செய்யலையா.. சம்யுக்தாவை ஒன் மேன் ஆர்மியாக கிழித்துவிட்ட ஆரி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி சுச்சியின் வருகைக்கு பிறகு ரணகளமாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் பிக்பாஸ் வீடு கோர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

பாலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு

பாலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு

இந்த கோர்ட் டாஸ்க்கில், சுசித்ராதான் நீதிபதியாக உள்ளார். இந்த டாஸ்க்கின் முதல் நாளான நேற்று பாலாஜி மீது சனம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார் சுசித்ரா.

ஏன் சனம்க்கு ஆதரவு?

ஏன் சனம்க்கு ஆதரவு?

இதேபோல் சுரேஷ் சக்கரவர்த்தி சனம் ஷெட்டி மீது தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக வாதாடி அந்த வழக்கிலும் பாலாஜிதான் வெற்றி பெற்றார். தனக்கு தாத்தாவை பிடிக்கவில்லை என்பதால் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பேசினேன் என பின்னர் விளக்கம் கொடுத்தார் பாலாஜி.

சம்யுக்தா (VS) ஆரி

சம்யுக்தா (VS) ஆரி

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதிலும் அந்த கோர்ட் டாஸ்க்குதான் தொடருகிறது. இதில் ஆரி மீது சம்யுக்தா தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது தன்னை எல்லோரும் கார்னர் செய்வதாக ஆரி கூறுவதில் உண்மையில்லை என்கிறார் சம்யுக்தா.

பாலாஜி கேப்டனாக்கியதால்

பாலாஜி கேப்டனாக்கியதால்

அதற்கு பதில் சொல்லும் ஆரி, ஒரு கேப்டனுக்கான ரெஸ்பான்ஸிபிளிட்டி என்னவென்றே தெரியாமல் கேப்டன் ஆகியிருக்கிறார் சம்யுக்தா. பாலாஜி உங்களை கேப்டனாக்கினார் என்பதால் நீங்கள் செய்யலையா? அப்படின்னா அதான் ஃபேவரிஸம் என்று குற்றம் சாட்டுகிறார் ஆரி.

எதுக்கு வந்துருக்கீங்க?

எதுக்கு வந்துருக்கீங்க?

அதற்கு பதில் சொல்லும் சம்யுக்தா, எந்த விஷயத்தில் நான் பாலாவை சப்போர்ட் செய்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் என்கிறார். அதற்கு இந்த வீட்ல எக்ஸைஸ் பண்ண வந்திருக்கிங்களா எதுக்கு வந்திருக்கிங்கன்னு அவங்கதான் கேட்டாங்க என சம்யுக்தாவை சொல்கிறார் ஆரி.

எல்லாருக்கும் தெரியும்

எல்லாருக்கும் தெரியும்

மேலும் இந்த வீட்டில் எக்ஸைஸ் பண்றது எத்தனை பேருன்னு எல்லாருக்கும் தெரியும் என்றும் கூறுகிறார் ஆரி. அப்போது ஆடியன்ஸாக அமர்ந்திருக்கும் பாலா அதையே சொல்ல, தம்பி ஏதாவது பேசணும்னா இங்க வந்து பேசு என்கிறார் ஆரி.

எரிச்சலாக்கும் பாலா

எரிச்சலாக்கும் பாலா

அதற்கு பேச முடியாது என மூஞ்சில் அடித்தாற் போல் சொல்லி முறைத்து பார்த்து ஆட்டியூட் காட்டுகிறார் பாலாஜி. இப்படியாக உள்ளது இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்றும் இந்த பாலாஜி வேலையை ஆரம்பித்துவிட்டார் என எரிச்சலாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X