குரைக்கிற நாய்க்கெல்லாம் இதுதான் செருப்படி.. புதிய கார் வாங்கிய சம்யுக்தா.. வீடியோவே வெறித்தனம்!
சென்னை: திருமணமான ஒரே மாதத்தில் விஷ்ணுகாந்தை விவாகரத்து செய்து பிரிந்த சின்னத்திரை நடிகை சம்யுக்தா புதிதாக கார் வாங்கிய வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து சீரியலில் விஷ்ணுகாந்த் உடன் இணைந்து நடித்த நிலையில், காதலில் விழுந்தார் சம்யுக்தா. இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் திருமணம் நடந்த நிலையில், திருமணம் ஆன சில வாரங்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில், விவாகரத்து செய்துக் கொண்டு பிரிந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

சம்யுக்தா பற்றி விஷ்ணுகாந்தும், விஷ்ணுகாந்த் பற்றி சம்யுக்தாவும் மாறி மாறி மோசமான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் பேச ஆரம்பித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
பீரியட்ஸ்னு கூட பார்க்கமாட்டான்: விஷ்ணுகாந்த் ஒரு செக்ஸ் சைக்கோ என்றும் பீரியட்ஸ் நேரம்னு கூட பார்க்காமல் படுக்க கூப்பிட்டு டார்ச்சர் பண்ணான் என்கிற அளவுக்கு அந்தரங்க விஷயங்களையே அப்படியே பப்ளிக்கில் போட்டு உடைத்து விஷ்ணுகாந்த் பற்றி படுமோசமாக பேசி பதற வைத்திருந்தார் சம்யுக்தா.

அதே போல, சம்யுக்தாவுக்கு சக நடிகருடன் தொடர்பு இருந்தது என்றும் ஏற்கனவே அவர் ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் செய்தது என பல விஷயங்களை விஷ்ணுகாந்தும் தனது பேட்டிகளில் வெளிப்படுத்தி பரபரப்பை பற்ற வைத்தார். விவாகரத்து முடிவுக்கு வந்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில் சொந்தமாக கார் வாங்கிய சம்யுக்தா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு டிரெண்டாகி வருகிறது.
புது கார் வாங்கிய சம்யுக்தா: சிகப்பு நிற ஹுண்டாய் கார் வாங்கிய சம்யுக்தா தனது குடும்பத்துடன் வேதபுரீஸ்வரர் கோயிலில் பெரிய பூசணிக்காய் எல்லாம் உடைத்து பலமாக போட்ட பூஜை வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் குரலில் வெளியான எதிர்த்து நில் பாடலை பதிவிட்டு ரெட் கலர் ஹுண்டாய் கார் அருகே செம மாஸாக போஸ் கொடுத்து நிற்கிறார் சம்யுக்தா.
குரைக்கிற நாய்க்கு செருப்படி: குரைக்கிற நாய் குரைக்கட்டும், தனியாக ஒரு பெண் சுதந்திரமாக உழைத்து போராடி முன்னுக்கு வருவது என்பது இந்த சமூகத்தில் சாதாரண விஷயமல்ல, எனக்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி.
பெண்கள் உங்கள் இலக்கை மட்டும் ஃபோகஸ் பண்ணுங்க, கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வாங்க, ஆணாதிக்க பேய்களுக்கு மத்தியில் பாஸ் லேடியா கெத்துக் காட்டுங்க, அதுவே அவங்களுக்கு கொடுக்கும் தரமான செருப்படியாக இருக்கும் என சம்யுக்தா தனது பதிவில் குறிப்பிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











