பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ.. சம்யுக்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்தீங்களா!
சென்னை: திருமணம் முடிந்து சந்தோஷமாக இருப்பார் சம்யுக்தா என ரசிகர்கள் நினைத்து வாழ்த்திய நிலையில், சில வாரங்களிலேயே கணவரை பிரிந்து மிகப்பெரிய சண்டையே வெடித்ததில் ரொம்பவே சங்கடத்தில் ஆழ்ந்த அவர், மீண்டும் பழையபடி சோஷியல் மீடியாவில் கம்பேக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் புதிதாக வாங்கிய காருக்கு பூஜை போட்ட வீடியோவை வெளியிடும் போது கூட ஹேட்டர்களுக்கு பஞ்ச் கொடுத்த சம்யுதா எந்தவொரு நெகட்டிவிட்டியும் இல்லாமல் டோட்டலாக தன்னை மட்டுமே ஃபோகஸ் செய்யும் விதமாக பாவாடை தாவணியில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு பக்காவான கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

சம்யுக்தாவை மீண்டும் இப்படி சந்தோஷமாக பார்க்கவே சூப்பராக இருக்கு என அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
15 நாட்களில் முடிந்த திருமண உறவு: சிப்பிக்குள் முத்து சீரியல் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. அந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த விஷ்ணுகாந்த் உடன் காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரம்மாண்டமாக தங்கள் திருமணத்தை சீரியல் பிரபலங்கள் சூழ நடத்தினர்.
ஆனால், வெறும் 15 நாட்களில் இருவருக்கும் இடையே ஏகப்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் வெடிக்க திருமண பந்தந்தை முறித்துக் கொண்ட இருவரும் மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ஒருவரை பற்றி இன்னொருவர் படுமோசமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அருவருக்கத்தக்க வகையில் அந்தரங்க விஷயங்களையும் கூறி அதிர்ச்சியடைய செய்தனர்.

பாவாடை தாவணியில்: தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பழைய ஃபார்முக்கு வரத்தொடங்கியுள்ள சம்யுக்தா தற்போது பாவாடை தாவணியை அணிந்துக் கொண்டு படு க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளையும் ஹார்ட்டின் எமோஜிக்களையும் அள்ளி வருகிறார்.
சம்யுக்தாவின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வேறலெவல் ரேணு என்றும் அழகி சாம் அக்கா பேரழகி என்றும் வர்ணித்து வருகின்றனர்.
தாவணி போட்ட தீபாவளி: பாவாடை கட்டியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள சம்யுக்தா அதற்கு கேப்ஷனாக சண்டக்கோழி படத்தில் வரும் தாவணி போட்ட தீபாவளி பாடலில் வரும் வரிகளான,
"பாவாடை கட்டி நிற்கும்
பாவலரு பாட்டு நீ...
பாதாதி கேசம் வர
பாசத்தோட காட்டு நீ...
தேக்கு மர ஜன்னல்
நீ தேவ லோக மின்னல்...
ஈச்ச மர தொட்டில்
நீ இழந்த பழ கட்டில்...
அருந்த வாலு குறும்பு தேழு
ஆனாலும் நீ ஏஞ்சலு✨
#samyutha"
என கேப்ஷன் போட்டு தன்னைத் தானே வர்ணித்துக் கொண்டு இப்படியொரு போஸ்ட்டை போட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.


Click it and Unblock the Notifications











