அடுத்த ஆண்டு ஃபெட்னா விழா சான் பிரான்சிஸ்கோவில்!

By Shankar

செயின்ட் லூயிஸ்: ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 28வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடக்கிறது.

உலகெங்கும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள். தமிழர் இல்லாத நாடே இல்லை என்ற நிலை இன்றைக்கு வந்துவிட்டது. தமிழன் புலம் பெயர்ந்த காரணம் சோகமானதாக இருந்தாலும், சென்ற இடத்துக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில்தான் பெரும்பாலும் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

San Francisco to host Fetna 2015

சென்ற இடத்துக்கு சிறப்பு சேர்த்தால் மட்டும் போதுமா... பிறந்த இனத்தின் பெருமை காக்க வேண்டாமா... அமுதத் தாய் மொழியான தமிழைக் காக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற துடிப்பை மட்டும் ஒருபோதும் தமிழன் மறப்பதில்லை.

தாய்த் தமிழகத்திலிருந்து சென்றவராக இருந்தாலும், ஈழத்திலிருந்து பெயர்ந்தவராக இருந்தாலும், தமிழனின் அடிப்படை நோக்கத்தில் மாற்றமில்லை.

பிறந்த இனத்தின் பெருமை, அன்னைத் தமிழை அடுத்த தலைமுறைக்கும் பெருமை குறையாமல் கொண்டு செல்லுதல் என்ற லட்சியங்களை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்டதுதான் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையான ஃபெட்னா.

அமெரிக்காவின் 52 மாகாணங்கள் மற்றும் கனடாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த ஃபெட்னா.

ஆண்டு தோறும் வெவ்வேறு அமெரிக்க நகரங்களில் இந்த அமைப்பின் ஆண்டு விழா சிறப்பாக நடந்து வருகிறது. தாயகத் தமிழர்களுக்கு தைத் திருநாள் என்றால், அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு ஃபெட்னா நடக்கும் நாளே திருவிழா எனலாம்.

இந்த ஆண்டு ஃபெட்னா நிகழ்ச்சி மிசௌரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. ஜூலை 3-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சி தமிழர்களின் வாழ்வியலை, அடுத்த கட்ட நகர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.

ஃபெட்னாவின் அடுத்த ஆண்டு விழா, கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடக்கவிருக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் ஒன்றான சான் பிரான்சிஸ்கோவில் இந்த விழா நடக்கவிருப்பது இதுவே முதல் முறை.

விழாவுக்கான ஏற்பாடுகளை இப்போதிலிருந்தே முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர் பேரவையின் தலைவரான நாஞ்சில் பீட்டர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தில்லைக் குமரன் உள்ளிட்ட விழா குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X