'அங்க அநியாய குளிரா இருக்காம்ல..' காதல் கணவருடன் காஷ்மீருக்கு ஹனிமூன் சென்ற பிரபல நடிகை!
மும்பை: தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட நடிகை சனா கான், ஹனிமூனுக்கு காஷ்மீர் சென்றுள்ளார்.
நடிகை சனாகான், சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

திரையுலகினர் வாழ்த்து
திருமணத்துக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில், கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார் சனா கான். அவர் திருமணம், கடந்த மாதம் 20 ஆம் தேதி நடந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவரை வாழ்த்தினர். தொடர்ந்து அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஹனிமூன் காஷ்மீர்
இப்போது அவர் காஷ்மீருக்கு ஹனிமூன் சென்றிருக்கிறார். கணவருடன் விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், பின்னர் அங்கு சென்று சேர்ந்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இங்கு அதிக குளிராக இருக்கிறது, அதுதான் காஷ்மீர் என்று இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

நடிகையின் கதை
நடிகை, சனா கான், தமிழில், சிம்புவின் சிலம்பாட்டம், பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதா மோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர், இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பிரபலமானார்.

மன அழுத்தம்
பிறகு சல்மான் கானின் ஜெய் ஹோ படத்திலும் நடித்தார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நிலையில் பிரிந்தனர். மெல்வின் தனக்குத் துரோகம் செய்துவிட்டார் என்றும் அவர் செய்த செயல்களால் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்றும் கூறி இருந்தார்.

இன்ஸ்டா மோதல்
இதையடுத்து இருவரும் இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்களால் மோதிக்கொண்டனர். பின்னர் நேரடியாகவே சண்டையிட்டனர். பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சனா கான். மனித குலத்துக்கு சேவை செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் சூரத் தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











