சில்க் ஸ்மிதாவின் ‘கிளைமாக்ஸ்’ தமிழில்...
சென்னை: சனாகான், சில்க் ஸ்மிதாவாக நடித்துள்ள, 'கிளைமாக்ஸ்' மலையாளப்படம், 'நடிகையின் டைரி' என்ற பெயரில் தமிழிலும் வருகிறது.
சில்க் ஸ்மிதா வாழ்க்கை ஏற்கனவே இந்தியில் 'த டர்டி பிக்சர்' என்ற பெயரில் வந்தது. அதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இதையடுத்து மலையாளத்திலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை 'கிளைமாக்ஸ்' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளனர். இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான், நடித்துள்ளார். இப்படம் 'நடிகையின் டைரி' என்ற பெயரில் தமிழிலும் வருகிறது.

சிம்புவின் ‘பார்ட்டி கேர்ள்’...
சனாகான் ‘சிலம்பாட்டம்' படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர். ‘வேர் இஸ் த பார்ட்டி' பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானவர்.

சில்க்கின் உதவியாளர்...
சில்க் ஸ்மிதாவை முதல் முறையாக மலையாள படத்தில் அறிமுகப்படுத்திய ஈஸ்ட்மென் ஆண்டனி ‘நடிகையின் டைரி' படத்துக்கு கதை எழுதியுள்ளார். இவர் சில்க் ஸ்மிதாவுக்கு உதவியாக இருந்தவர்.

கதையல்ல... நிஜம்!!!
ஈஸ்ட்மென் ஆண்டனி , சில்க்கை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்தவர். எனவே இந்த படத்தின் திரைக்கதை உண்மை சம்பவங்களுடன் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதைக்கப்பட்ட நிஜம்....
சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்த சோகங்கள், ஏமாற்றங்கள், இறுதியில் அவர் தூக்கில் தொங்கி இறந்த விஷயங்கள் அனைத்தும் படத்தில் இடம் பெறுகிறது.

அனிலின் இயக்கம்...
இதில் அரவிந்த், சுரேஷ் கிருஷ்ணா, சுபின் போன்றோரும் நடித்துள்ளனர்.இப்படத்தை மலையாள முன்னணி டைரக்டரான அனில் இயக்கியுள்ளார்.

சிலந்தியின் தயாரிப்பு...
டிஜிட்டல் தியேட்டர்ஸ் சார்பில் இயக்குனர் ஆதிராம் நிர்வாக தயாரிப்பில் உருவாகி உள்ளது. இவர் சிலந்தி படத்தை டைரக்டு செய்தவர். பென்ரி இக்னேஷியஸ், எஸ்.பி., வெங்கடேஷ் இசையமைத்துள்ளனர். சஜித்மேனன், ஒளிப்பதிவு செய்தள்ளார். ஸ்ரீஜாரவி வசனம் எழுதியுள்ளார்


Click it and Unblock the Notifications











