ரகசிய திருமணம்.. காதல் கணவருடன் சிம்பு பட ஹீரோயின் ஹேப்பி செல்ஃபி.. வைரலாகும் போட்டோ!

By

மும்பை: சமீபத்தில் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட சிம்பு பட நடிகை வெளியிட்டுள்ள செல்ஃபி வைரலாகி வருகிறது.

சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடித்தவர், சனா கான். தமிழில் சில படங்களில் நடித்தார்.

தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தவர் இவர்.

இந்தி பிக்பாஸ்

இந்தி பிக்பாஸ்

விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்த இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். பிறகு சல்மான் கானுடன் ஜெய் ஹோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடன இயக்குநர்

நடன இயக்குநர்

மும்பையை சேர்ந்த நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்த சனா கானா, அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார். பின்னர் அவரை பிரிந்தார், சனா. மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று தெரிவித்தார், சனா கான்.

சினிமாவுக்கு முழுக்கு

சினிமாவுக்கு முழுக்கு

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமாவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். 'சினிமா வாழ்க்கையை விட்டு விலகி, மனித குலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க, இந்த சேவையை செய்ய விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

முப்தி அனாஸ்

முப்தி அனாஸ்

இந்நிலையில், அவர் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. அவர் திருமணத்துக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில், கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

செல்ஃபி புகைப்படம்

செல்ஃபி புகைப்படம்

ரசிகர்கள் அவரை வாழ்த்தினர். பின்னர் திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட அவர், தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இப்போது காரில் அமர்ந்தவாறு கணவருடன் அவர் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் படம் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X