சினிமாவில் இருந்து விலகிய பிரபல நடிகை, திடீர் திருமணம்.. தொழிலதிபரை மணந்தார்.. வைரலாகும் வீடியோ!

By

மும்பை: திரைத்துறையை விட்டு சமீபத்தில் விலகிய பிரபல நடிகை தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார்.

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர், சனாகான். இதில் இவர் நடிப்பு கவனிக்கப்பட்டது.

பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

நடன இயக்குநர்

நடன இயக்குநர்

சமீபத்தில், விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்த இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார்.

துரோகம் செய்தார்

இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். பின்னர் அவரை பிரிந்தார். மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று தெரிவித்தார், சனா கான். பிறகு இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிகொண்டனர். இது பரபரப்பானது.

சேவை செய்ய

சேவை செய்ய

இதற்கிடையே, கடந்த மாதம், தான் சினிமாவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். 'சினிமா வாழ்க்கையை விட்டு விலகி, மனித குலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க இந்த சேவையை செய்ய விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

முப்தி அனாஸ்

முப்தி அனாஸ்

இந்நிலையில், தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரும் கேக் வெட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

வெள்ளை ஹிஜாப்

வெள்ளை ஹிஜாப்

ஒரு வீடியோவில், வெள்ளை உடையில் ஹிஜாப் அணிந்திருக்கும் சனா கான், கணவரின் கையை பிடித்தபடி மாடிப்படியில் இருந்து இறங்கி வருகிறார். எப்போது இந்த திருமணம் நடந்தது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. சனா கானின் திடீர் திருமணம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X