'என்னை எப்போதும் நல்ல விஷயங்களுக்கு..' காதல் கணவருக்கு நன்றி சொல்லும் முன்னாள் ஹீரோயின்!
சென்னை: தன்னை நல்ல விஷயங்களுக்கு ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதாக, தனது கணவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை சனா கான்.
சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடித்தவர், சனா கான். தமிழில் சில படங்களில் நடித்தார்.
தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தவர் இவர்.

இந்தி பிக்பாஸ்
விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்த இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். பிறகு சல்மான் கானுடன் ஜெய் ஹோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சினிமா வாழ்க்கை
மும்பையை சேர்ந்த நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்த சனா கானா, பின்னர் அவரை பிரிந்தார். இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 'சினிமா வாழ்க்கையை விட்டு விலகி, மனித குலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

முப்தி அனாஸ்
இந்நிலையில், அவர் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. அவர் திருமணத்துக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில், கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

சோசியல் மீடியா
பின்னர் தனது திருமணம் பற்றி தெரிவித்த சனா கான், காஷ்மீருக்கு ஹனிமூன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அங்கு கடும் குளிர் நிலவுவதாகவும் தெரிவித்து இருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், இப்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கவனிக்கவில்லை
அதில், தன்னை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல ஊக்குவிக்கும் தனது கணவருக்கு நன்றி என்று கூறியுள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களை மக்கள் கவனிக்கவில்லை என்பது முக்கியமானதல்ல. அல்லா அதைக் கவனிக்கிறார் என்பதுதான் முக்கியமானது.

நல்ல விஷயங்கள்
நிலைமை அல்லது எதிர்வினைகள் எதுவாக இருந்தாலும் என்னை எப்போதும் நேர்மையான விஷயங்களைப் பின்பற்ற ஊக்குவித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார். சனா கானின் இந்த பதிவு ஏராளமான லைக்ஸ்களை பெற்றிருக்கிறது. நெட்டிசன்ஸ் பலர் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











