இன்னுமா முடியல இவங்க காதல் பஞ்சாயத்து? முன்னாள் காதலரை சரமாரியாக மீண்டும் தாக்கும் சிம்பு ஹீரோயின்!

By

சென்னை: தனது காதலரை, சிம்பு படத்தின் ஹீரோயின் மீண்டும் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சனாகான். பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.

பிரிந்துவிட்டேன்

பிரிந்துவிட்டேன்

இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இதை கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் அறிவித்தனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார் சனா கான்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அவர் கூறும்போது, நான் மெல்வினை முழுமனதாகக் காதலித்தேன். ஆனால் அவர் செய்த செயல்கள் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் மன அழுத்தத்தில் இருக்கிறேன். 8 மாதங்கள் பழகிய பிறகு மெல்வின், சிலரை ஏமாற்றுவதாக ஒருவர் எனக்கு தெரிவித்தார். அவர் பற்றிய உண்மை தெரிய வந்தது. இதையடுத்து காதலை முறித்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார். இது பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பரபரப்பானது.

கடவுள் காப்பாற்றினார்

கடவுள் காப்பாற்றினார்

'மெல்வின் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அவர் யார் என்று தெரியும். ஆனால் அவர் பெயரை வெளியிடுவது சரியில்லை. மெல்வினிடம் இருந்து கடவுள் என்னை காப்பாற்றி இருக்கிறார். இனி ஆண்கள் மீது நம்பிக்கை வருமா? என்பது தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு மெல்வின் தனது இன்ஸ்டாகிராமில் ஜாடையாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அழைக்கிறாள்

அழைக்கிறாள்

அதில், 'அவள் அழைக்கிறாள், போய்விடாதே' என்று எழுதப்பட்ட பனியனை மெல்வின் அணிந்திருக்கிறார். அதே போல வாய்ஸும் வருகிறது. இதையடுத்து சனாவும் களத்தில் இறங்கினார். இருவரும் இன்ஸ்டாவில் மறைமுகமாக மோதிக்கொண்டனர். இந்நிலையில் மெல்வின், சனாகான் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் என்றும் பிளாக் மெயில் செய்கிறார் என்றும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

மூளைச் சலவை

மூளைச் சலவை

இதுபற்றி சனா கான் இப்போது கூறும்போது, பிளாக்மெயிலா? நான் அவர் காதலை முறித்தபோது அவருக்கு நேர் எதிராக நின்றேன். இரண்டு மணி நேரமாக என்னை சமாதானப்படுத்த முயன்றார். என்னை மூளைச் சலவை செய்ய முயன்றார். நான் அவர் பேச்சைக் கேட்கும் மனநிலையில் இல்லை. அவர் என்னை அடித்திருக்கிறார். கண்டபடி அடித்து உதைத்திருக்கிறார்.

Recommended Video

அடடா என்ன க்யூட்.. சனா சிங் இன்ஸ்டாவில் பகிர்ந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோ
பகிரங்கப்படுத்துவேன்

பகிரங்கப்படுத்துவேன்

என் மண்டையில் ரத்தம் வடிந்திருக்கிறது. முகத்திலும் காயங்கள் இருக்கிறது. அந்தப் புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. அதை இன்னும் பதிவேற்றவில்லை. அப்போது சொன்னேன், எனக்கு செய்த கொடுமைகளை பகிரங்கப்படுத்தப் போகிறேன். மக்களுக்குத் தெரியட்டும் என்றேன். இதை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு, நான் பிளாக் மெயில் செய்கிறேன் என்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X