என்னங்க நடக்குது இங்கே? சரமாரியாக இன்ஸ்டாவில் மோதிக் கொள்ளும் நடிகை சனா கானும் முன்னாள் காதலரும்!

By

Recommended Video

அடடா என்ன க்யூட்.. சனா சிங் இன்ஸ்டாவில் பகிர்ந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோ

சென்னை: தனது காதலரை பிரிந்துவிட்டதாக சமீபத்தில் அறிவித்த நடிகை சனாகானும் அவரது முன்னாள் காதலரும் ஜாடை மாடையாக இன்ஸ்டாகிராமில் மோதி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சனாகான். பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வந்த அவர், இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார்.

மெல்வின் லூயிஸ்

மெல்வின் லூயிஸ்

அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இதை இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்து விட்டேன் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார் நடிகை சனாகான்.

பொறாமையில்

பொறாமையில்

அவர் கூறும்போது, நான் மெல்வினை முழுமனதோடு காதலித்தேன். ஆனால் அவர் செய்த காரியம் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் மன அழுத்தத்தில் இருக்கிறேன். 8 மாதங்கள் பழகிய பிறகு மெல்வின் சிலரை ஏமாற்றுவதாக ஒருவர் எனக்கு தெரிவித்தார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது பொறாமையில் சொல்லியிருப்பார்கள், நம்பவேண்டாம் என்றார்.

உண்மை தெரிந்தது

அவர் செல்போனை எடுத்து பார்க்க முயன்ற போது வேகமாக அதைப் பறித்து சில மெசேஜ்களை அழித்தார். பிறகுதான், அவர் பற்றிய உண்மை தெரிந்தது. எனக்கு சொன்ன தகவலும் உண்மை என்பதை அறிந்தேன். இதையடுத்து காதலை முறித்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார். இது பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் பரபரப்பானது.

கடவுள் என்னை

'மெல்வின் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அவர் யார் என்று தெரியும். ஆனால் அவர் பெயரை வெளியிடுவது சரியில்லை. மெல்வினிடம் இருந்து கடவுள் என்னை காப்பாற்றி இருக்கிறார். நான் அவரை திருமணம் செய்ய விரும்பினேன். இனி ஆண்கள் மீது நம்பிக்கை வருமா? என்பது தெரியவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து மெல்வின் பற்றி சனாவுக்கு வந்த சில மெசேஜ்களையும் பெயரை அழித்தபடி வெளியிட்டிருந்தார்.

அழைக்கிறாள், போய்விடாதே

இந்நிலையில், மெல்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜாடையாக ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், 'அவள் அழைக்கிறாள், போய்விடாதே' என்று எழுதப்பட்ட பனியனை மெல்வின் அணிந்திருக்கிறார். அதே போல வாய்ஸும் வருகிறது. இதையடுத்து சனாவும் களத்தில் இறங்கினார். தனது இன்ஸ்டாவில், 'அவள் அழைக்கிறாள், போய்விடாதே' என்று ஸ்டேட்டஸ் போடும் நண்பர்களே, உண்மை என்னவென்றால், அவர்கள் வர நினைக்கிறார்கள். ஆனால், அழைப்பதற்கு யாருமில்லை' என்று மீம்ஸ் போட்டார்.

வீடியோ கிளிப்

இதையடுத்து, மெல்வின், எனக்கு பிடித்த காட்சி என்று வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தி காமெடி நடிகர் ஜானி லீவர், மாலையணிந்த ஒரு புகைப்படத்தின் முன் நிற்கிறார். ஆக்‌ஷன் என்றதும் பொய்யாக அழுகிறார் அந்த புகைப்படத்தைப் பார்த்து. இதையடுத்து சனா, ரெஸ்டாரன்டில் உட்கார்ந்திருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு, அதில், 'உங்கள் பாய்பிரண்டை விட வெயிட்டர் அழகாக இருக்கும்போது...' என்று கேப்ஷன் கொடுத்து ஒரு ரியாக்‌ஷன் லுக் கொடுத்துள்ளார். இவர்களின் இந்த இன்ஸ்டா வார், வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ஜாலியாக ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X