பூமியின் சொர்க்கமாமே.. கொட்டும் பனியில் பிரபல நடிகை ஜில்.. பரவும் ஹனிமூன் போட்டோஸ்!

By

மும்பை: நடிகை சனாகான் குல்மார்க்கில் இருந்து வெளியிட்டு ஹனிமூன் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

நடிகை சனாகான், தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை கடந்த மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில், கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

 காஷ்மீர் ஹனிமூன்

காஷ்மீர் ஹனிமூன்

அவர் திருமணம், கடந்த மாதம் 20 ஆம் தேதி நடந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து அவர் தனது கணவருடன் ஜாலியாக சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது அவர் காஷ்மீருக்கு ஹனிமூன் சென்றிருக்கிறார்.

Recommended Video

Shocking! Enthiran Biggest secret | Chiti Robo | Manoj Bharathi | Rajinikanth
 குளிராக இருக்கிறது

குளிராக இருக்கிறது

கணவருடன் விமானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அவர், பின்னர் அங்கு சென்று சேர்ந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். சில நாட்களுக்கு முன் இங்கு அதிக குளிராக இருக்கிறது, அதுதான் காஷ்மீர் என்று இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார்.

 கொட்டும் பனி

கொட்டும் பனி

இந்நிலையில் இப்போது காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் இருந்து கொட்டும் பனியில் எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கணவரை கட்டிபிடித்தபடி அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, பூமியின் சொர்க்கம் என்று குறிப்பிட்டுள்ளார் சனா கான். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 ஆயிரம் விளக்கு

ஆயிரம் விளக்கு

சனா கான், தமிழில், சிம்புவின் சிலம்பாட்டம், பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதா மோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர், இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பிரபலமானார். சல்மான் கானின் ஜெய் ஹோ படத்திலும் நடித்தார்.

 சினிமா விலகல்

சினிமா விலகல்

அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நிலையில் பிரிந்தனர். பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சனா கான். இந்நிலையில் அவர் சூரத் தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X