ரகசிய திருமணத்துக்கு பிறகு கணவர் போட்டோவை வெளியிட்ட சிம்பு ஹீரோயின்.. திரையுலகினர் வாழ்த்து!

By

மும்பை: ரகசிய திருமணத்துக்கு பிறகு தனது கணவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார், சிம்பு பட ஹீரோயின்.

சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடித்தவர், சனாகான். இதையடுத்து தமிழில் சில படங்களில் நடித்தார்.

தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

சல்மானின் ஜெய் ஹோ

சல்மானின் ஜெய் ஹோ

விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்த இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அங்கு அதிக பிரபலமடைந்தார். பிறகு சல்மான் கானுடன் ஜெய் ஹோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிரிந்து விட்டேன்

பிரிந்து விட்டேன்

அவர் மும்பையை சேர்ந்த நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். பின்னர் அவரை பிரிந்தார், சனா. மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று தெரிவித்தார், சனா கான்.

ஆணைக்கு இணங்க

ஆணைக்கு இணங்க

பிறகு இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிகொண்டனர். இது பரபரப்பானது. இதற்கிடையே, கடந்த மாதம், தான் சினிமாவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். 'சினிமா வாழ்க்கையை விட்டு விலகி, மனித குலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க, இந்த சேவையை செய்ய விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

முப்தி அனாஸ்

முப்தி அனாஸ்

இந்நிலையில், அவர் சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கணவரின் கையை பிடித்தபடி மாடிப்படியில் இருந்து இறங்கி வருவது போலவும் கேக் வெட்டுவது போலவும் அந்த வீடியோ காட்சி இருந்தது/

விவரம் தெரியவில்லை

விவரம் தெரியவில்லை

எப்போது இந்த திருமணம் நடந்தது என்பது பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் திருமணத்துக்குப் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில், கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். நெட்டிசன்ஸ் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X