Sana Khan: கட்டிக்க துணிக்கூட இல்லாமல் கஷ்டப்பட்ட சிம்பு பட ஹீரோயின்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: Sana Khan (சனா கான்) - சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சனா கான் லண்டன் விமான நிலையத்தில் தனது குடும்பத்துடன் பட்ட கஷ்டத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
Yehi Hai High Society எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமானவர் சனா கான். தமிழில் ஜீவா நடித்த ஈ படத்தில் ஐட்டம் டான்சராக அறிமுகமான இவர், சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

சிலம்பாட்டம் ஹீரோயின்: தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு, தலைவன், அயோக்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்த சனா கான் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 2019-ல் நடித்த அயோக்கியா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சனா கான் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டு 2020-ஆம் ஆண்டு நான் என் தொழிலதிபரை மணந்து கொண்டு குடும்பத்தோட செட்டில் ஆகிவிட்டார்.
சினிமாவை விட்டு விலகல்: இந் நிலையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் லண்டனுக்கு சுற்றுலா சென்ற சனா கான் அங்கே தான் பட்ட கஷ்டங்களை இன்ஸ்டாகிராம் இல் வீடியோவாக போட்டு ரசிகர்களிடம் புலம்பித் தள்ளியுள்ளார். கவர்ச்சி நடிகையாக சினிமாவில் வளம் வந்த சனா கான், திருமணத்திற்கு பிறகு முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எப்போதுமே பர்தா அணிந்தபடியே வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சுற்றுலாவில் அதிக ஆர்வம் கொண்ட சனா கான் தனது கணவருடன் பல வெளிநாடுகளுக்கு சுற்றி வரும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
கட்டிக்க துணி இல்லாமல் கஷ்டம்: இந்நிலையில் தற்போது லண்டனுக்கு சென்ற சனா கான் கடந்த இரண்டு நாட்களாக கட்டிக்க வேறு மாற்றுத் துணியே இல்லாமல் கஷ்டப்படுகிறேன் என வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. விமான ஊழியர்கள் செய்த குளறுபடி காரணமாக சரியான நேரத்தில் சனா கானின் லக்கேஜ் பேக் அவரது கைக்கு வரவில்லையாம்.
லண்டன் விமான நிலையத்துக்கு வந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் தனது கைக்கு சிங்கிள் பேக் கூட வரவில்லை என்றும் அதன் காரணமாக உடை மாற்றவோ, குழந்தைக்கு தேவையான மாற்றவோ வசதி இல்லாமல் உள்ளது என தனது சோக கதையை புலம்பியுள்ளார் சனா கான்.
அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கவலைப்படாதீர்கள் சீக்கிரமாகவே உங்களுடைய லக்கேஜ் உங்களை வந்து சேரும் உங்கள் மனதுக்கு ஒன்றும் ஆகாது என ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











