தர்ஷனுடன் காதல் முறிவு.. காரணம் ஷெரீன்..? சோகத்தில் சனம் போட்ட இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் ஷாக் !

சனம் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சென்னை: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள பதிவால், அவருக்கும் தர்ஷனுக்கும் இடையே பிரேக் அப் ஆகிவிட்டதோ என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தர்ஷனும், நடிகை சனமும் காதலித்து வருகின்றனர். தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, சனம் நிறைய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். தனது சமூகவலைதளப் பக்கத்திலும் தர்ஷன் தொடர்பாக பல பதிவுகளை வெளியிட்டார்.

ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்த தர்ஷனும், ஷெரீனும் காதலிப்பது போல் நிகழ்ச்சியில் சில காட்சிகள் காட்டப்பட்டது. எனவே தர்ஷன் நிஜமாகவே ஷெரீனைக் காதலித்தால் தான் விலகி விடுவதாக சனம் ஒரு பேட்டியில் கூறினார்.

பதிவு

பதிவு

ஷெரீனின் ரசிகர்களும் சனமை காயப்படுத்துவது போலவே பல பதிவுகளை வெளியிட்டனர். அதோடு சனம் தனது விளம்பரத்திற்காகத்தான் தர்ஷன் பெயரைப் பயன்படுத்துகிறார் என்றும் சிலர் குற்றம் சாட்டினர். இதனால் இனி தர்ஷன் வாழ்வில் குறுக்கிடப் போவதில்லை என அழுது கொண்டே ஒரு வீடியோ வெளியிட்டார் சனம்.

புதிய புகைப்படங்கள்

புதிய புகைப்படங்கள்

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய பிறகு, சனம் அவரைச் சந்தித்தார். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து தான் பிக் பாஸ் பைனலில் கலந்து கொண்டனர். பெரும்பாலான இடங்களுக்கு சேர்ந்தே சென்றனர்.

ஷெரீன் விளக்கம்

ஷெரீன் விளக்கம்

அதோடு ஷெரீனும் தான் தர்ஷனைக் காதலிக்கவில்லை எனத் தெரிவித்தார். இதனால் அப்பிரச்சினை முடிந்து விட்டது எனக் கருதப்பட்டது. ஆனால், இன்னும் அப்பிரச்சினை முடியவில்லை போலும். தற்போது சனம் வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டா பதிவு ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சனம் வெளியிட்ட பதிவு

சனம் வெளியிட்ட பதிவு

அப்பதிவில் அவர், "நான் நிறைய கேட்கவில்லை. ஆனால் தவறான நபரிடம் கேட்டு விட்டேன் என்பது இப்போது தான் புரிகிறது" எனக் கூறியுள்ளார். மேலும், "நீங்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள் என்றால் அதற்காகக் கவலைப்பட வேண்டியதில்லை.

லாபமா, நஷ்டமா?

லாபமா, நஷ்டமா?

அவர்கள் போக வேண்டும் என விரும்பினால், கதவைத் திறந்து வையுங்கள். அவர்கள் செல்லட்டும். காலம் பதில் சொல்லும் அது லாபமா, நஷ்டமா என" என சனம் அப்பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவிற்கு ரசிகர்களிடமிருந்து கலவையான பதில் கிடைத்துள்ளது.

நிம்மதி

நிம்மதி

சிலர் தர்ஷனைப் பிரிந்து விட்டீர்களா? அது தான் நல்லது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் சிலரோ, ‘நீங்கள் தர்ஷனை மூச்சுகூட விட முடியாமல் பிடித்து வைத்திருந்தீர்கள். இனி அவருக்கு நிம்மதி' எனப் பதிவிட்டுள்ளனர். நிஜமாகவே தர்ஷனுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தான் சனம் இந்தப் பதிவை வெளியிட்டாரா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா எனத் தெரியவில்லை.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

ஆனால், ரசிகர்களாகவே அந்த முடிவிற்கு வந்து விட்டனர். தர்ஷன், ஷெரீனுடன் சேர வேண்டும் என்றெல்லாம்கூட ஷெரின் ரசிகர்கள் பதிவு வெளியிட்டு வருகின்றனர். சனம் வெளியிட்ட பதிவால் தர்ஷன் காதல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X