For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா?

  |

  சென்னை: அதிகாரம் கைக்கு வந்த உடன் பாலா, சனம் ஷெட்டியை நல்லாவே ஓட்டினார்.

  முந்திரிக்கொட்டை என்றும், எதுக்கும் முன்னே வந்து மூக்கை நுழைக்க மாட்டேன் எனவும் சனம் ஷெட்டியை சொல்ல வைத்து அழகு பார்த்தார்.

  முந்திரிக்கொட்டைக்கு அர்த்தமே தெரியாமல் அதை பண்ணிவிட்டு, பின்னர் அர்த்தம் அறிந்து கொண்ட சனம் பாலா மீது செம காண்டானார்.

  பாலாவுக்கு ஊட்டி விட்ட ஷிவானி.. எல்லாம் அதிகாரத் திமிரா? காதல் பவரான்னு தெரியலையே?

  நாய்க்குட்டி போல

  நாய்க்குட்டி போல

  போன சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி, இந்த சீசனில் எப்படியாவது தன்னை விட சின்ன பையனாக இருந்தாலும், பாலாவை பிக்கப் பண்ணி விடலாம் என அவர் பின்னால் ஒரு நாய்க்குட்டியை போல சுற்றி சுற்றி வருகிறார். ஆனால், பாலா அதை கொஞ்சமும் மதிக்காமல் ஷிவானி பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

  முந்திரிக்கொட்டை மாதிரி முந்தமாட்டேன்

  முந்திரிக்கொட்டை மாதிரி முந்தமாட்டேன்

  சம்பந்தம் இல்லாம ஆர்க்யூ பண்ண மாட்டேன் என பாலா சனம் ஷெட்டியை 10 வாட்டி சொல்ல சொன்னார். அதை சொல்லி முடித்து பிறகு, சிட்டுக்கு சிட்டுக்கு என டான்ஸ் ஆடிய அவரை மீண்டும் வம்பிழுத்த பாலா, முந்திரி கொட்டை மாதிரி முந்தமாட்டேன் என 10 வாட்டி சொல்ல சொன்னார்.

  ஒண்ணுமே தெரியல

  ஒண்ணுமே தெரியல

  சா பூ த்ரி விளையாட்டுனா என்னன்னு தெரியல, முந்திரி கொட்டைன்னா Cashew Nut ஆனு கேக்றாங்க.. என்னம்மா சனம் ஷெட்டி, ஒண்ணுமே உங்களுக்கு தெரியாதா? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா? இப்படி தத்தியா இருந்தீங்கன்னா 22 படம் இல்லை 200 படம் நடிச்சாலும் உங்களை யாருக்குமே தெரியாது.

  கோபம் மட்டும் வரும்

  கோபம் மட்டும் வரும்

  எல்லா டாஸ்க்கும் முடிந்து நைட் தூங்கும் போது, எந்த புண்ணியாவான் அநேகமா மொட்டை தாத்தாவாத்தான் இருக்கும், சனம்க்கு முந்திரி கொட்டைக்கு மீனிங் சொல்லிக் கொடுத்துட்டாங்க, உடனே உன்னை ரொம்ப நம்பினேன் பாலா நீ என்னை ஏமாத்திட்ட என மறுபடியும் பாலாவுடன் சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார் சனம் ஷெட்டி.

  மறுபடியும் அழுகாச்சியா

  மறுபடியும் அழுகாச்சியா

  அர்ச்சனா, பாலா என எபிசோடு ஆரம்பத்தில் தொடங்கிய அழுகாச்சி சீன் அடுத்த நாள் நைட் தூங்கும் போது சனம் ஷெட்டி அழுததுடன் முடிவுக்கு வந்தது. நான் கேம் ஆடுனேன் அதுக்கெல்லாம் நீ கோச்சிக்க கூடாது. இங்க யாரும் நண்பர்களும் கிடையாது. பகைவர்களும் கிடையாது என பாலாவுக்கு பதில் அனிதா பஞ்ச் வசனம் பேசினார்.

  கையெடுத்து கும்பிட்ட பாலா

  கையெடுத்து கும்பிட்ட பாலா

  சம்யுக்தாவிடம் மீண்டும் பாலா இந்த விஷயத்தை சொல்ல, சனமை சமாதானம் படுத்த சொன்னார். ஷிவானி, கேபி, பாலா, சனம் ஒன்றாக அமர்ந்து பேசும் போதும், நீ என் பிரண்ட் இல்லை எதிரி என சனமை நல்லாவே வெறுப்பேற்றினார் பாலா. பின்னர், இருவரும் தனியாக இருந்த போது, மன்னிப்பு கேட்ட பாலாவிடம் இன்னொரு வாட்டி என சனம் ஆசையாக கேட்க கையெடுத்து கும்பிட்டு சாரி சொன்னார் பாலா.

  அதுக்கு மட்டுந்தானா

  அதுக்கு மட்டுந்தானா

  சனம் ஷெட்டி லேட்டா ரியாக்ட் ஏன் பண்றாங்கன்னு ஷிவானி, கேபியிடம் தனியாக பேசியதை பார்த்தாலே சனம் ஷெட்டி அதுக்கு மட்டுமே பாலாவிடம் கோபித்துக் கொள்ளவில்லை என்றும், ஷிவானி ஊட்டி விட்டது, ஷிவானியை பாலா சைட் அடித்தது போன்ற விஷயங்களால் ஹர்ட் ஆகியே, பாலாவை தன் பக்கம் திருப்ப இந்த டிராமாவை போட்டாரா என்பதையும் வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Sanam Shetty cried over Balaji Murugadoss taking advantage and play with her emotions on Raja task. And also Bala teases her to say she is not is friend or anyone to him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X