எனக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி சார்.. வெடி வச்சது தெரியாமல் கண்கலங்கிய சனம் ஷெட்டி!

சென்னை: பாலாஜிக்காக தன்னிடம் மன்னிப்பு கேட்ட கமலிடம் கண்கலங்கி நன்றி கூறினார் சனம் ஷெட்டி.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ரேங்க் டாஸ்க்கின் போது சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆவேசமான பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எச்சரித்த கமல்

எச்சரித்த கமல்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அந்த விவகாரம் குறித்து விசாரித்தார் கமல். அப்போது இது வயலென்சின் விளிம்பு, இதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடியாது என எச்சரித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து வாயே திறக்காத ஹவுஸ்மேட்ஸையும் விளாசி விட்டார்.

மன்னிப்பு கேட்க முடியாது

மன்னிப்பு கேட்க முடியாது

பாலாஜி செருப்பால் அடித்துக்கொண்டது, தனக்கு பெரும் அவமானம் என்று கூறிய சனம் ஷெட்டி, அதற்காக பாலாஜி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். ஆனால் மன்னிப்பு கேட்கவே முடியாது என்றார் பாலாஜி.

மன்னிப்பு கேட்ட கமல்

மன்னிப்பு கேட்ட கமல்

அர்ச்சனா கூட மன்னிப்பு கேட்டுடு தங்கமே என கெஞ்சிய போதும் அசரவில்லை பாலாஜி. இதனை தொடர்ந்து கமலே சனம் ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடாது சார், நீங்கள் கேட்க வேண்டாம் என்றார் சனம்.

அர்ச்சனா மன்னிப்பு

அர்ச்சனா மன்னிப்பு

நான் ஏன் கேட்கக்கூடாது, அது என் வீடும்தான் என்றார் கமல். கமல் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து பாலாஜி சனம் ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அர்ச்சனாவும் சனம் ஷெட்டியிடம் ஹவுஸ்மேட்ஸ் சார்பாக மன்னிப்பு கேட்டார்.

கண் கலங்கிய சனம்

கண் கலங்கிய சனம்

இந்நிலையில் இன்றைய எபிசோடில் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே கமலிடம் பேச டைம் கேட்ட சனம் ஷெட்டி, எனக்காக குரல் கொடுக்கணும்னு நான் எப்போவுமே எதிர்பார்த்ததில்ல ரொம்ப நன்றி சார். மன்னிப்பு கேட்டீங்க.. நீங்க ரொம்ப பெரிய மனுஷன் சார் என்று கண் கலங்கினார்.

வெடி வச்சது தெரியாமல்

வெடி வச்சது தெரியாமல்

இந்த வாரம் தான்தான் வெளியேறப் போகிறோம் என்று தெரியாமல், தனக்கு வைக்கப்பட்டிருக்கும் வெடியையும் தெரியாமல் கமலிடம் குரல் தழுதழுக்க உருக்கமாக பேசினார் சனம். கடுமையான போட்டியாளரான சனம் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X